பொழுதுபோக்கு

விடுதலையை தேடும் ஜனநாயகனுக்கு தொடரும் தலையிடி!

  • January 15, 2026
  • 0 Comments

தடைகள் எல்லாம் நீங்கி, ஜனநாயகன் விரைவில் திரைக்கு வரும் என விஜய் ரசிகர்கள் வழிமீது விழிவைத்து காத்திருந்தாலும் பொங்கல் தினத்திலும் கசப்பான செய்தியே கிட்டியுள்ளது. ஜனநாயகன் படம் தொடர்பில், பட தயாரிப்பு நிறுவனத்தால் தாக்கல் செய்யப்பட்ட மேன்முறையீட்டு மனு நிராகரிக்கப்பட்டுள்ளது. ஜனநாயகன் படத்துக்கு விரைந்து தணிக்கை சான்றிதழ் வழங்க உத்தரவிடுமாறுகோரி படக்குழு உயர் நீதிமன்றத்தில் அவசர வழக்குத் தொடர்ந்தது. இதனை விசாரித்த உயர் நீதிமன்ற தனி நீதிபதி பி.டி. ஆஷா, படத்திற்கு ‘U/A 16+’ சான்றிதழ் வழங்க […]

உலகம்

மத்திய கிழக்கை சூழ்கிறது போர் மேகம்: வான்வெளியை மூடியது ஈரான்!

  • January 15, 2026
  • 0 Comments

மத்திய கிழக்குக்கு பயணம் மேற்கொள்வதற்கு திட்டமிட்டுள்ள தமது நாட்டு பிரஜைகளுக்கு ஆஸ்திரேலியா பயண எச்சரிக்கை விடுத்துள்ளது. கட்டார் மற்றும் ஓமான் நாட்டுக்குரிய பயண எச்சரிக்கையின் ‘அபாய’ நிலைக்கு அதிகரிக்கப்பட்டுள்ளது. ஈரானின் போராட்டங்கள் தொடரும் நிலையில் அந்நாட்டின் வான்வெளி மூடப்பட்டுள்ளது. ஈரானில் மோதல்நிலை உக்கிரமடையும் என்பதாலேயே வான்வெளி மூடப்பட்டுள்ளது என்ற அச்சம் எழுந்துள்ளது. மத்திய கிழக்கிலுள்ள தமது படைகளை அமெரிக்கா வெளியேற்றி வருகின்றது. இராணுவ நடவடிக்கைக்குரிய தந்திரோபாய நகர்வாக இது பார்க்கப்படுகின்றது. இந்நிலையில் ஈரானுக்கு ஆஸ்திரேலியா பயணத் தடை […]

இந்தியா

இந்திய எல்லைக்குள் ஊடுருவ முற்பட்ட பாகிஸ்தான் ட்ரோன்களால் பரபரப்பு!

  • January 15, 2026
  • 0 Comments

இந்தியாவுக்குள் ஊடுருவ முற்பட்ட பாகிஸ்தான் ட்ரோன்கள்மீது இந்திய இராணுவம் துப்பாக்கிச்சூடு நடத்தியுள்ளது. அத்துடன், எல்லை பகுதியில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. ஜம்மு-காஷ்மீர் ரஜோரி மாவட்டத்தின் எல்லைக் கட்டுப்பாட்டுக் கோடு (எல்ஓசி) வழியாகவே பாகிஸ்தான் ட்ரோன்கள் உள்நுழைய முற்பட்டுள்ளன. இதனையடுத்து இந்திய எல்லைக்குள் பறந்த ட்ரோன்களை குறிவைத்து இந்திய இராணுவம் துப்பாக்கிசூடு நடத்தியது என அதிகாரி ஒருவர் தெரிவித்தார். இதனை அடுத்து ட்ரோன்கள் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதிக்குள் தப்பிச் சென்றன எனவும் அவர் கூறினார். ‘‘ கடந்த மூன்று […]

இலங்கை செய்தி

இலங்கையிலிருந்து நாளை விடைபெறுகிறார் அமெரிக்க தூதுவர்!

  • January 15, 2026
  • 0 Comments

இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் ஜுலி சங் Julie Chang, நாளை (16) தாயகம் திரும்புகின்றார். இவ்வாறு விடைபெறவுள்ள தூதுவர், கடந்த சில வாரங்களாக பிரியாவிடை சந்திப்புகளை நடத்திவருகின்றார். ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க, முன்னாள் ஜனாதிபதிகளான சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க, மஹிந்த ராஜபக்ச, ரணில் விக்கிரமசிங்க ஆகியோருடன் பேச்சு நடத்தி இருந்தார். பாதுகாப்பு செயலாளர் உட்பட உயர்மட்ட அதிகாரிகளையும் சந்தித்திருந்தார். பிரதமர் கலாநிதி ஹரணி அமரசூரியவை நேற்று சந்தித்து பிரியாவிடை பெற்றார். 53 வயதான ஜுலி சங், தென்கொரியாவை […]

அரசியல் இலங்கை செய்தி

நம்பிக்கையில்லாப் பிரேரணை கைவிடப்படுமா? சஜித் வெளியிட்டுள்ள அறிவிப்பு!

  • January 15, 2026
  • 0 Comments

மாணவர்களின் எதிர்காலத்தை பாதுகாப்பதற்காக முன்னெடுக்ககூடிய அத்தனை நடவடிக்கைகளையும் ஐக்கிய மக்கள் சக்தி முன்னெடுக்கும் என்று எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார். பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரியவுக்கு எதிராக கொண்டுவருவதற்கு உத்தேசிக்கப்பட்ட நம்பிக்கையில்லாப் பிரேரணையை எதிரணி கைவிடுமா என அவரிடம் கேள்வி எழுப்பட்டது. இதற்கு பதிலளிக்கையிலேயே எதிர்க்கட்சி தலைவர் மேற்கண்டவாறு கூறினார். “ கல்வி மறுசீரமைப்பை ஒரு வருடத்துக்கு பிற்போடுவதால் இந்த ஆட்சியின்கீழ் கல்வித்துறையில் எழுந்துள்ள பிரச்சினைகள் தீரப்போவதில்லை. பல்வேறு தரப்பினர்களுடனும் கலந்துரையாடியே கல்வி மறுசீரமைப்பு இடம்பெற […]

பொழுதுபோக்கு

“ஜெயிலர் – 2” வில் களமிறங்கும் விஜய் சேதுபதி!

  • January 15, 2026
  • 0 Comments

“ஜெயிலர் – 2” – படத்தில் தான் சிறப்பு தோற்றத்தில் நடித்திருக்கின்றார் என்பதை நடிகர் விஜய் சேதுபதி Vijay Sethupathi உறுதிப்படுத்தியுள்ளார். ரஜினி Rajinikanth நடிப்பில் மிகவும் எதிர்பார்க்கப்படும் படமான ’ஜெயிலர் 2’ விளங்குகின்றது. ஜெயிலர் படம் வெற்றிநடை போட்ட நிலையிலேயே அதன் இரண்டாம் பாகம் பலத்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையிலேயே ஜெயிலர் 2 படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடித்திருப்பதாக விஜய் சேதுபதி தெரிவித்துள்ளார். “ எனக்கு ரஜினிகாந்தை ரொம்ப பிடிக்கும். அவருடன் இருக்கும்போது நான் நிறைய […]

உலகம் செய்தி

பற்றி எரிகிறது ஈரான்! இராணுவ நடவடிக்கைக்கு தயாராகும் அமெரிக்கா?

  • January 15, 2026
  • 0 Comments

மத்திய கிழக்கிலுள்ள தமது படைத்தளங்களில் இருந்து சில பணியாளர்களை நாடு திரும்புமாறு அமெரிக்கா அறிவுறுத்தியுள்ளது. அமெரிக்க அதிகாரியொவரை மேற்கோள்காட்டி சர்வதேச ஊடகமொன்று இந்த தகவலை வெளியிட்டுள்ளது. தமது நாட்டுமீது அமெரிக்கா தாக்குதல் நடத்தினால் அதன் பாதுகாப்பு தளங்கள்மீது பதில் தாக்குதல் நடத்தப்படும் என ஈரான் எச்சரித்துள்ளது. இந்நிலையிலேயே மத்திய கிழக்கிலுள்ள தமது படை தளங்கள் தொடர்பில் அமெரிக்கா கூடுதல் அவதானம் செலுத்தியுள்ளது. ஈரானில் வரலாறு காணாத வகையில் மக்கள் போராட்டம் வெடித்துள்ளது. மக்களை தூண்டிவிட்டு வன்முறையை அமெரிக்காவும், […]

இலங்கை செய்தி

” அனைத்து இனங்களினதும் கலாசார அடையாளங்களுக்கு மதிப்பளிப்போம்” – சஜித்!

  • January 15, 2026
  • 0 Comments

“தைப்பொங்கல் விழா நமக்குச் சொல்லித் தரும் பாடத்தை நன்றாக அறிந்துகொண்டால், அது நமது வாழ்க்கையில் மிகப்பெரிய பயனாக இருக்கும்.” இவ்வாறு எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார். அவரின் பொங்கல் தின வாழ்த்து செய்தி வருமாறு, பல இனங்கள், பல மதங்கள் மற்றும் பல மொழிகள் கொண்ட சமுதாயத்தின் இருப்பு உறுதிப்படுத்தப்படுவது, அந்தந்த இனங்களின் கலாசார அடையாளங்களை மதிக்க அனைவரும் காட்டும் அர்ப்பணிப்பின் அடிப்படையிலாகும். அதேபோல் அந்தந்த கலாசாரங்களின் மையக் கருத்துகளை சரியாகப் புரிந்துகொண்டு செயல்படுவதிலுமாகும். இந்து […]

இலங்கை செய்தி

“நாட்டில் நல்லிணக்கம் பிறக்கட்டும்: தமிழர்களின் பிரார்த்தனைகள் நிறைவேறட்டும்”

  • January 15, 2026
  • 0 Comments

“நல்லிணக்கம் மிக்க ஒரு புதிய இலங்கையைக் கட்டியெழுப்புவதற்கு இந்தத் தைப்பொங்கல் திருநாளில் நாம் அனைவரும் ஒன்றிணைந்து உறுதி பூணுவோம்.” இவ்வாறு பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய Dr. Harini Amarasooriya அறைகூவல் விடுத்துள்ளார். பிரதமரின் பொங்கல் தின வாழ்த்து செய்தி வருமாறு, உழைப்பிற்கும், இயற்கைக்கும் நன்றி செலுத்தும் உன்னத பண்பாட்டின் அடையாளமாகத் திகழும் தைப்பொங்கல் திருநாளைக் கொண்டாடும் தமிழ் மக்கள் அனைவருக்கும் எனது இதயம் கனிந்த நல்வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கின்றேன். மனித வாழ்வியலானது இயற்கையோடு எத்துணை பின்னிப் […]

இலங்கை செய்தி

ஒரு நாடாக மீண்டெழுவோம்: தைத் திருநாளில் ஜனாதிபதி அழைப்பு!

  • January 15, 2026
  • 0 Comments

” எந்தவொரு இருளுக்கும் பிறகு ஒளி பிறக்கும் என்று நாம் உறுதியாக நம்புகிறோம். ஒரு தேசமாக மீண்டெழுவதற்கு ஒன்றிணைவோம்.” இவ்வாறு ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தனது பொங்கல் வாழ்த்து செய்தியில் தெரிவித்துள்ளார். ஜனாதிபதியின் பொங்கல் வாழ்த்து செய்தி வருமாறு, உலகெங்கிலும் உள்ள இந்து பக்தர்களால் மிகுந்த பக்தியுடனும் உற்சாகத்துடனும் இன்று (15) தைப்பொங்கல் தினம் கொண்டாடப்படுகின்றது. வெற்றிகரமான விளைச்சலுக்கு உதவிய சூரியக் கடவுளுக்கும், கால்நடைகளுக்கும், இயற்கை அன்னைக்கும், நன்றி உணர்வை எடுத்தியம்பும் கொண்டாட்டமாக தைப்பொங்கல் தினம் அமைகின்றது. […]

error: Content is protected !!