பாக் நீரிணையை ‘அறிவுசார் நீரிணையாக’ மாற்றுவோம் ; யாழில் ஆளுநர் அழைப்பு
இந்தியப் பல்கலைக்கழகங்கள் உலகத்தரம் வாய்ந்த கல்வியை, மேற்குலக நாடுகளை விட நான்கில் ஒரு பங்கு செலவிலேயே வழங்குகின்றன என வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணம் திருவள்ளுவர் கலாசார மண்டபத்தில் இன்று நடைபெற்ற ‘இந்தியாவில் கல்வி’ (Study in India) வழிகாட்டல் கண்காட்சியில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இதனைத் குறிப்பிட்டார். யாழ்ப்பாணத்தில் உள்ள இந்தியத் துணைத் தூதரகத்தின் அனுசரணையில் நடைபெற்ற இந்தக் கண்காட்சியில், இந்தியாவின் 1,300-க்கும் மேற்பட்ட பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்லூரிகளின் பிரதிநிதிகள் பங்கேற்றனர். […]













