உலகம்

நாடாளுமன்ற தேர்தலுக்கு தயாராகும் தாய்லாந்து!

  • December 15, 2025
  • 0 Comments

தாய்லாந்தில் நாடாளுமன்றம் கலைக்கப்பட்டுள்ள நிலையில் பெப்ரவரி 08 ஆம் திகதி தேர்தல் நடத்தப்படும் என்று அந்நாட்டின் தேர்தல் ஒழுங்குமுறை ஆணையம் இன்று  தெரிவித்துள்ளது. பிரதமர் அனுடின் சார்ன்விரகுல் (Anutin Charnvirakul) அரசியலமைப்பு மாற்றம் தொடர்பான பிரச்சினையில் நம்பிக்கையில்லா வாக்கெடுப்பிற்கு எதிர்கட்சிகள்  அழைப்பு விடுக்க தயாரானதை தொடர்ந்து நாடாளுமன்றத்தை கலைத்து உத்தரவு பிறப்பித்தார். நீண்டகால எல்லைப் பிரச்சினை தொடர்பாக தாய்லாந்து கம்போடியாவுடன் பெரிய அளவிலான போரில் ஈடுபட்டுள்ள நிலையில் வர இருக்கும் தேர்தல் முக்கிய மாற்றமாக பார்க்கப்படுகிறது.  

இலங்கை இன்றைய முக்கிய செய்திகள்

டிட்வா புயல் – உலக வங்கியிடமிருந்து $120 மில்லியன் நிதியுதவி

  • December 15, 2025
  • 0 Comments

இலங்கையில் டிட்வா புயல் காரணமாக ஏற்பட்ட பேரழிவுக்கு உலக வங்கி குழு ஆழ்ந்த கவலை வெளியிட்டுள்ளது. இந்த பேரிடரை எதிர்கொண்டு இலங்கையர்கள் காட்டிய மீள்தன்மை மற்றும் உயிர்களை காப்பாற்றவும் மீட்பு பணிகளை மேற்கொள்ளவும் அரசு எடுத்த விரைவான நடவடிக்கைகள் பாராட்டத்தக்கவை என உலக வங்கி தெரிவித்துள்ளது. இலங்கை அரசின் கோரிக்கையை தொடர்ந்து, உலக வங்கி குழு 120 மில்லியன் அமெரிக்க டொலர் அவசர நிதி உதவியை வழங்குகிறது. இந்த நிதி, நடப்பு உலக வங்கி திட்டங்களில் இருந்து […]

இலங்கை

ஜப்பான் பேரிடர் நிவாரண குழுவின் பணிகள் நிறைவு – இன்று நாடு திரும்புகின்றனர்

  • December 15, 2025
  • 0 Comments

ஜப்பான் பேரிடர் நிவாரண (JDR) மருத்துவக் குழு, தங்கள் பணியை நிறைவு செய்து இன்று நாட்டிற்கு திரும்புகின்றனர். நாட்டில் பேரிடரால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு மருத்துவ உதவிகளை வழங்க 31 உறுப்பினர்கள் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர். வைத்தியர்கள், வைத்திய நிபுணர்கள், நிவாரணப் பணியாளர்கள் மற்றும் மீட்பு நிபுணர்கள் அடங்கிய மருத்துவக் குழு டிசம்பர் 03 ஆம் திகதியன்று நாட்டை வந்தடைந்தனர். சிலாபம் பொலிஸ் மைதானத்தில் அவர்களால் நிறுவப்பட்ட முழுமையான வசதிகளுடன் கூடிய நடமாடும் வைத்தியசாலை மூலம் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அவசர […]

இந்தியா

ஆபத்தான காற்றின் தரத்தால் போராடும் டில்லி – கட்டுமானப் பணிகளும் தடை

  • December 15, 2025
  • 0 Comments

இந்தியாவின் புதுடில்லி மற்றும் அதனை அண்மித்த பகுதிகளில் உள்ள பாடசாலைகளுக்கான வகுப்புகளை நிகழ்நிலையில் நடத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்தியத் தலைநகரம் ஆபத்தான காற்றின் தரத்துடன் போராடுவதால் கட்டுமானப் பணிகளும் தடைசெய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. குளிர்காலம் நிலவி வரும் நிலையில் தலைநகர் டெல்லியை அடர்த்தியான புகை மூட்டம் சூழ்ந்த காட்சி இணையத்தில் வைரலாகி வருகிறது. குறித்த பகுதிகளில் எதிரே வருபவர்கள் கூட கண்ணுக்குத் தெரியாத அளவுக்கு காற்றின் மாசு அதிகரித்துள்ளதாக இந்திய செய்திகள் தெரிவிக்கின்றன. காற்று மாசைக் குறைப்பதற்காக 40 […]

இலங்கை

640 பாடசாலைகள் மீள திறக்கப்படாது : கல்வி அமைச்சு அறிவிப்பு!

  • December 15, 2025
  • 0 Comments

ஊவா, மத்திய மற்றும் வடமேற்கு மாகாணங்களில் மொத்தம் 640 பாடசாலைகள் நாளை மீண்டும் திறக்கப்படாது என்று கல்வி அமைச்சின் செயலாளர் அறிவித்துள்ளார். தொடர்புடைய செய்தி    மீளவும் திறக்கப்படும் பாடசாலைகள் – சீருடைகள் தொடர்பில் விசேட அறிவிப்பு!

உலகம்

மொராக்கோவில் பெரும் வெள்ளம் – 37 பேர் உயிரிழப்பு

  • December 15, 2025
  • 0 Comments

மொராக்கோவின் அட்லாண்டிக் கடலோர மாகாணமான சஃபியில் வெள்ளம் காரணமாக 37 பேர் உயிரிழந்துள்ளனர். பலத்த மழை காரணமாக (Safi) சஃபி நகரத்தின் வீதிகளில் ஏற்பட்ட வெள்ளம் காரணமாக 70 வீடுகள் மற்றும் வணிகங்கள் முழுமையாக சேதமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. மேலும் சீரற்ற வானிலையால் பாதிக்கப்பட்ட மேலும் 14 பெர் வைத்தியசாலைகளில் சிகிச்சைப் பெற்று வருவதாக கூறப்படுகிறது. மேலும் பலர் காணாமற் போயுள்ளதாகவும் சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இந்நிலையில் தேடுதல் மற்றும் மீட்பு நடவடிக்கைகள் தொடர்ந்து நடைபெற்று வருவதாக […]

ஐரோப்பா

ஆக்ஸ்பாம் தலைமை நிர்வாகி பதவி நீக்கம்

  • December 15, 2025
  • 0 Comments

பிரித்தானியாவின் புகழ்பெற்ற சர்வதேசத் தொண்டு நிறுவனமான ஆக்ஸ்பாமின் (Oxfam) தலைமை நிர்வாகியின் நடத்தை மற்றும் முடிவெடுப்பில் கடுமையான சிக்கல்கள் இருப்பதாக சுயாதீன மதிப்பாய்வு கண்டறிந்ததைத் தொடர்ந்து டொக்டர் ஹலிமா பேக் தனது பதவியிலிருந்து நீக்கப்பட்டார். அவர் கொடுமைப்படுத்துதல் குற்றச்சாட்டுகளையும் எதிர்கொண்டுள்ளார். அவரது நடத்தை நம்பிக்கையை மீறியது என்றும், ஏற்றுக்கொள்ள முடியாதது என்றும் ஊழியர்கள் கூறியுள்ளனர். இந்த விசாரணைக்கு சுமார் 70 ஊழியர்கள் கடிதத்தில் கையெழுத்திட்டதாக கூறப்படுகிறது. சிலர் கருத்து வேறுபாடு காரணமாக ராஜினாமா செய்ததாகவும் தெரிவிக்கப்படுகிறது. இந்த […]

இலங்கை

சமூக ஊடகங்கள் வழியாக இடம்பெறும் நிதிமோசடி தொடர்பில் எச்சரிக்கை!

  • December 15, 2025
  • 0 Comments

சமூக ஊடகங்கள் வழியாக நடத்தப்படும் மோசடிகள் அதிகரித்து வருவது குறித்து இலங்கை கணினி அவசர தயார்நிலை குழு பொதுமக்களை எச்சரித்துள்ளது. கடந்த சில வாரங்களாக, சமூக ஊடக தளங்கள் மூலம் ஆன்லைன் மற்றும் நிதி மோசடிகளைச் செய்வதற்கான முயற்சிகள் அதிகரித்துள்ளதாக இலங்கை CERT எச்சரிக்கை விடுத்துள்ளது. எனவே, சமூக ஊடகங்களைப் பயன்படுத்தும் போது பொதுமக்கள் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்குமாறு வலியுறுத்தப்பட்டுள்ளது. சைபர் குற்றவாளிகள் வரவிருக்கும் பண்டிகை காலத்தையும் தற்போதைய வானிலை தொடர்பான பேரிடர் நிலைமைகளையும் பயன்படுத்தி பொதுமக்களின் […]

ஐரோப்பா செய்தி முக்கிய செய்திகள்

COVID 19 – அரசாங்கத்தின் பொருளாதார நடவடிக்கைகள் குறித்து ரிஷியிடம் விசாரணை

  • December 15, 2025
  • 0 Comments

பிரித்தானியாவில் கொவிட் பரவிய போது வேலையின்மையை கட்டுப்படுத்தல் மற்றும் மக்களின் வாழ்க்கைத் தரத்தை பாதுகாப்பதிலேயே முக்கிய கவனம் செலுத்தியதாக முன்னாள் பிரதமர் ரிஷி சுனக் தெரிவித்துள்ளார். கொவிட் தொற்று காலத்தில் அரசாங்கத்தின் பொருளாதார நடவடிக்கைகள் குறித்து கொவிட் விசாரணை குழு ரிஷி சுனக்கிடம் விசாரணைகளை மேற்கொண்டது. இதன்போதே வேலையின்மையை கட்டுப்படுத்துவதில் கவனம் செலுத்தியதாக அவர் தெரிவித்துள்ளார். மேலும் 2020 ஆம் ஆண்டில் அறிமுகப்படுத்தப்பட்ட சில நடவடிக்கைகள் அறிவியல் ஆலோசகர்களுடன் கலந்தாலோசிக்காமல் இடம்பெற்றது என்ற குற்றச்சாட்டுக்களையும் அவர் மறுத்துள்ளார். […]

இலங்கை ஐரோப்பா செய்தி

பிரித்தானியாவில் அரச சேவையில் இருந்த தமிழர் ஒருவரின் படு மோசமான செயல்!

  • December 15, 2025
  • 0 Comments

பிரித்தானியாவில் 12 வயதான சிறுமி ஒருவரிடம் பாலியல் சேட்டையில் ஈடுபட்ட தமிழர் ஒருவர் தேசிய சுகாதார சேவையின் பணியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார். இப்ஸ்விச்சில் ( Ipswich) உள்ள தேசிய சுகாதார சேவையில் ரேடியோகிராஃபராக (radiographer) பணியாற்றிய வினோத் ராமச்சந்திரன் என்பவரே பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளார். மூன்று பிள்ளைகளின் தந்தையான அவர் மீண்டும் ஒரு ரேடியோகிராஃபராகப் (radiographer) பணிபுரிவதைத் தடுத்து, அவரது பெயரை தொழில்முறை பதிவேட்டில் இருந்து நீக்க சுகாதாரம் மற்றும் பராமரிப்புத் தொழில்கள் தீர்ப்பாயம் சேவை முடிவு செய்துள்ளது. […]

error: Content is protected !!