அனுமதியின்றி நேட்டோ எல்லைக்குள் நுழைந்த ரஷ்ய வீரர்களால் பரபரப்பு!
எஸ்தோனியா (Estonia) எல்லைக்குள் மூன்று ரஷ்ய எல்லைக் காவலர்கள் சட்டவிரோதமாக நுழைந்துள்ளதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது. (எஸ்தோனியா நேட்டோ உறுப்புரிமையை கொண்ட நாடாகும்) குறித்த மூவரும் இன்று நர்வா (Narva River) நதி வழியாக உள்ளே நுழைந்ததாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இந்த குற்றச்சாட்டைத் தொடர்ந்து, ரஷ்ய தூதரை அழைக்க திட்டமிட்டுள்ளதாக எஸ்தோனிய வெளியுறவு அமைச்சகம் அறிவித்துள்ளது. இந்த சம்பவத்தை தொடர்ந்து எல்லையில் பாதுகாப்பை பலப்படுத்துதல் மற்றும் பணியாளர் பிரச்சினை குறித்து எஸ்தோனிய உள்துறை அமைச்சர் இகோர் டாரோ (Igor […]













