செம்மணி மனித புதைகுழியை நுழைவாயிலுக்கு வெளியிலிருந்து பார்வையிட்ட ஐ.நா உயர்ஸ்தானிகர்: அரசாங்கத்தின் தீர்மானம்
இலங்கைக்கு வருகை தந்திருந்த ஐக்கிய நாடுகள் சபையின் உயர் பதவியிலுள்ள மனித உரிமைகள் உத்தியோகத்தருக்கு வடக்கில் புதிதாக கண்டுபிடிக்கப்பட்ட பாரிய மனிதப் புதைகுழிகளை பார்வையிடும் வாய்ப்பானது, இறுதித்தருணம் வரை அதற்கு இடையூறு செய்வதற்கு அரசாங்கம் மேற்கொண்ட வெற்றியளிக்காத திட்டமிடப்பட்ட முயற்சிகளை, காணாமலாக்கப்பட்ட தமிழ் மக்களின் உறவினர்களால் நீதிமன்ற நடவடிக்கை மூலம் தோற்கடிக்கப்பட்டதன் பின்னரே கிடைத்துள்ளது. குற்றமொன்று நிகழ்ந்த இடமாக இனங்காணப்பட்டு நீதிமன்றத்தின் கண்காணிப்பின் கீழ் உள்ள புதைகுழி பிரதேசத்திற்குள் நுழைவதற்கு நீதவானின் அனுமதி அவசியமாகும். இந்நிலையில் ஐக்கிய […]













