இலங்கை

இலங்கையில் கோர விபத்து – 30 பேர் காயம்

  • April 29, 2025
  • 0 Comments

பெலியத்த ஹெட்டியாராச்சி வளைவுக்கு அருகில் இடம்பெற்ற விபத்தில் 30 பேர் காயமடைந்துள்ளனர். பெலியத்த நோக்கி பயணித்த தனியார் பேருந்தும், பெலியத்தவிலிருந்து டிக்வெல்ல நோக்கி பயணித்த இலங்கை போக்குவரத்து சபை பேருந்தும் மோதியதில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது. இரண்டு பேருந்துகள் நேருக்கு நேர் மோதியதில் இந்த விபத்து ஏற்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர். விபத்தில் காயமடைந்தவர்கள் தங்காலை மருத்துவமனையிலும் பெலியத்த ஹத்போதிய மருத்துவமனையிலும் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

வட அமெரிக்கா

அமெரிக்காவில் பிள்ளைப் பராமரிப்பு நிலையம் மீது மோதிய வாகனம் – 4 பிள்ளைகள் பலி

  • April 29, 2025
  • 0 Comments

அமெரிக்காவில் பிள்ளைப் பராமரிப்பு நிலையம் உள்ள கட்டடத்தின்மீது வாகனம் மோதியதில் 4 பிள்ளைகள் உயிரிழந்துள்ளனர். அவர்கள் 4 வயதுக்கும் 18 வயதுக்கும் உட்பட்டவர்களாகும். சம்பவம் நடந்தபோது அவர்களில் மூவர் கட்டடத்திற்கு வெளியேயும் இன்னொருவர் உள்ளேயும் இருந்தனர். அமெரிக்காவின் இலனோய் மாநிலத்தின் சாதாம் என்ற சிறிய ஊரில் அந்தச் சம்பவம் நடந்தது. காயமுற்ற சிலர் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டதாக அம்மாநிலக் காவல்துறை கூறியது. வாகனத்தின் ஓட்டுநருக்கு எந்தக் காயமும் இல்லை. அவர் சோதனைக்காக மருத்துவமனைக்குக் கொண்டுசெல்லப்பட்டார். சம்பவம் மிகுந்த […]

வாழ்வியல்

இதய ஆரோக்கியத்திற்கு உதவும் 5 இரவு நேர வழக்க மாற்றங்கள்!

  • April 29, 2025
  • 0 Comments

இதய ஆரோக்கியத்தைப் பாதிப்பதில் பகல் நேரச் செயல்பாடுகளைப் போலவே, இரவு நேரப் பழக்கவழக்கங்களும் முக்கிய பங்கு வகிக்கிறது. நாம் இரவில் மேற்கொள்ளும் சில எளிய மாற்றங்கள், நீண்ட கால நோக்கில் இதய நோய்கள் ஏற்படும் அபாயத்தைக் கணிசமாகக் குறைக்க உதவும். பெரும்பாலும் கவனிக்கப்படாத இந்த இரவு நேரப் பழக்கங்கள், நமது ஒட்டுமொத்த நலனையும், குறிப்பாக இதயத்தின் ஆரோக்கியத்தையும் தீர்மானிக்கின்றன. இந்தப் பதிவில் இதயத்தைப் பாதுகாக்கும் 5 முக்கிய இரவு நேர மாற்றங்கள் என்னென்ன என்று பார்ப்போம். 1. […]

ஐரோப்பா

ஸ்பெயின், போர்ச்சுகல் மின்தடை – படிப்படியாக வழமைக்கு திரும்பும் மின்சாரம்

  • April 29, 2025
  • 0 Comments

ஸ்பெயினிலும் போர்ச்சுகலிலும் மின்சாரம் படிப்படியாக வழமைக்கு திரும்புவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. நேற்று இரு நாடுகளிலும் பெரிய அளவிலான மின்தடை ஏற்பட்டது. பொதுப் போக்குவரத்து, மின்படிக்கட்டுகள் உட்பட பல சேவைகள் பாதிக்கப்பட்டன. தொலைபேசி, இணையத் தொடர்புகள் துண்டிக்கப்பட்டன. தற்போது மின்சார விநியோகம் ஓரளவுக்கு வழக்கநிலைக்குத் திரும்பிவிட்டது. 5 விநாடிகளில் சுமார் 15 கிகாவாட்ஸ் மின்சாரம் திடீரென காணாமல்போயுள்ளது. 15 கிகாவாட்ஸ் என்பது அந்தத் தருணத்தில் பயன்பாட்டில் இருந்த மின்சாரத்தில் பாதிக்கும் அதிகமான அளவாகும். ஊழியர்கள் சிலர் இன்று வீட்டில் இருக்க […]

இலங்கை

இலங்கையில் உச்சத்தை எட்டிய தேங்காய் விலை

  • April 29, 2025
  • 0 Comments

இலங்கையில் தேங்காயின் விலை சில பிரதேசங்களில் மீண்டும் அதிகரித்துள்ளதாக தென்னைப் பயிர்செய்கை சபையின் தலைவர் சுனிமல் ஜயக்கொடி தெரிவித்துள்ளார். 180 ரூபாவிற்கு விற்கப்பட்ட தேங்காய் தற்போது 220 ரூபாய் முதல் 240 ரூபாய் வரையில் விற்பனை செய்யப்படுவதாக அவர் குறிப்பிட்டுள்ளார். எவ்வாறாயினும் , மே மற்றும் ஜூன் மாதங்களில் நாட்டில் தேங்காய் அறுவடை 500 மில்லியனை தாண்டும் என்று தென்னை ஆராய்ச்சி நிறுவனம் கணித்துள்ளது. அவ்வாறாயின் தேங்காயின் விலை மீண்டும் குறைவடையும் என்று தென்னைப் பயிர்செய்கை சபையின் […]

அறிவியல் & தொழில்நுட்பம்

அசத்தல் அம்சங்களுடன் பிக்சல் 9a ஸ்மார்ட் போன்

  • April 29, 2025
  • 0 Comments

கூகுள் சமீபத்தில் தனது மிகவும் எதிர்பார்க்கப்பட்ட மிட் ரேன்ஜ் ஸ்மார்ட்போனான பிக்சல் 9a வை இந்தியாவில் அறிமுகப்படுத்தியது. சில சிக்கல்களால் ஏற்பட்ட தாமதங்களுக்குப் பிறகு, பிக்சல் 9a இப்போது இந்தியாவில் விற்பனையில் கிடைக்கிறது. இந்த ஸ்மார்ட்போன் ஆனது டென்சர் சிப்செட்டால் இயக்கப்படுகிறது. மேலும், இதில் டூயல் கேமரா செட்அப்-ஐ கொண்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போனின் விற்பனையுடன் ஒரு அறிமுகச் சலுகையும் உள்ளது. எனவே, இந்த பிரீமியம் லெவல் ஸ்மார்ட்போனை அசல் விலையை விட மிகக் குறைந்த விலையில் நீங்கள் […]

இலங்கை

கொழும்பில் மீண்டும் துப்பாக்கிச் சூடு – ஒருவர் பலி – ஒருவர் படுகாயம்

  • April 29, 2025
  • 0 Comments

பாணந்துறை நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் உயிரிழந்ததுடன், மற்றொருவர் காயமடைந்துள்ளார். பாணந்துறை – ஹிரண பகுதியில் நேற்று இரவு இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. குறித்த பகுதியிலுள்ள வீடொன்றில் இடம்பெற்ற நிகழ்வொன்றின் போது, மோட்டார் சைக்கிளிலி் பிரவேசித்த இரண்டு அடையாளந்தெரியாத நபர்களினால் இந்த துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளது. சம்பவத்தில் காயமடைந்த இருவர் பாணந்துறை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், அவர்களில் ஒருவர் உயிரிழந்தார். மேற்கு மாலமுல்ல பகுதியைச் சேர்ந்த 35 வயதுடைய நபரே உயிரிழந்ததுடன், காயமடைந்த அதே பகுதியைச் […]

விளையாட்டு

ஐபிஎல் தொடரில் 94 போட்டிகள்: பிசிசிஐ தீவிர ஆலோசனை

  • April 29, 2025
  • 0 Comments

ஐபிஎல் டி20 கிரிக்கெட் தொடரின் 2028-ம் ஆண்டு சீசனில் ஆட்டங்களின் எண்ணிக்கையை 74-ல் இருந்து 94 ஆக அதிகரிக்க பிசிசிஐ தீவிரமாக ஆலோசித்து வருவதாக ஐபிஎல் சேர்மன் அருண் துமால் தெரிவித்துள்ளார். 2028-ம் ஆண்டு முதல் ஐபிஎல் சீசனை 94 போட்டிகளுக்கு விரிவுபடுத்துவது குறித்து பிசிசிஐ தீவிரமாக பரிசீலித்து வருகிறது. அதேவேளையில் புதிய அணிகளை சேர்க்கும் திட்டம் எதுவும் இல்லை எனவும் தகவல்கள் வெளியாகி உள்ளன. 2022-ம் ஆண்டு சீசனில் புதிதாக குஜராத் டைட்டன்ஸ், லக்னோ சூப்பர் […]

இலங்கை இன்றைய முக்கிய செய்திகள்

இலங்கையில் 3 முன்னாள் அமைச்சர்கள் விரைவில் கைது – ஜனாதிபதி வெளியிட்ட அறிவிப்பு

  • April 29, 2025
  • 0 Comments

3 முன்னாள் அமைச்சர்களுக்கு எதிராக விரைவில் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க தெரிவித்துள்ளார். பதிவு செய்யப்படாத வாகனங்களைப் பயன்படுத்தியதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளவர்கள் தொடர்பிலேயே நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். பேருவளையில் நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் உரையாற்றும் போதே அவர் இந்தக் கருத்தை வெளியிட்டார். உத்தியோகபூர்வ இறக்குமதி தடையின் போது இறக்குமதி செய்யப்பட்ட வாகனங்களை தவறாகப் பயன்படுத்துவதில் தனிநபர்கள் ஈடுபட்டிருப்பது விசாரணைகளில் தெரியவந்துள்ளதாக ஜனாதிபதி மேலும் தெரிவித்தார். முறையான பதிவு இல்லாமல் வாகனங்களைப் பயன்படுத்தியதற்காக […]

இந்தியா

மணமகளுக்குப் பதிலாக மாமியாரைத் திருமணம் செய்த நபர் – மணமகனுக்கு காத்திருந்த அதிர்ச்சி

  • April 29, 2025
  • 0 Comments

இந்தியாவின் உத்தரப் பிரதேச மாநிலத்தின் மீரூட் நகரைச் சேர்ந்த நபர் ஒருவர் மணமகளுக்குப் பதிலாக மாமியாரை திருமணம் செய்துள்ளார். 21 வயது மந்தாஷாவை திருமணம் செய்துகொள்ளவிருந்த அசீம் தன்னை ஏமாற்றித் திருமணம் நடத்தப்பட்டதாக கூறியுள்ளார். திருமணம் முடிந்த கையுடன் அசீம் மணமகளின் முகத்தை மறைத்திருந்த துணியை அகற்றினார். மணமேடையில் அமர்ந்திருந்தது மந்தாஷா அல்ல மந்தாஷாவின் 45 வயது தாயார் என்பது அவருக்குத் தெரியவந்தது. அதிர்ச்சியடைந்த அசீம் பொலிஸாரிடம் முறைப்பாடு செய்துள்ளார். அதனையடுத்து இருதரப்புக்கும் இடையே சமரசப்பேச்சு நடைபெற்றதாக […]

error: Content is protected !!