இலங்கை செய்தி

இலங்கை இ-ஓட்டுநர் உரிமத்தை அறிமுகப்படுத்த நடவடிக்கை

  • August 24, 2024
  • 0 Comments

இலங்கையில் 2025 ஆம் ஆண்டின் முதல் ஆறு மாதங்களில் இ-ஓட்டுநர் உரிமத்தை அறிமுகப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இது அடுத்த வருட ஆரம்பத்தில் அறிமுகப்படுத்தப்படும் என எதிர்பார்க்கப்படுவதாக போக்குவரத்து அமைச்சின் செயலாளர் ரஞ்சித் ரூபசிங்க தெரிவித்துள்ளார். நேற்று ஜனாதிபதி ஊடக மையத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் தெரிவித்தார். அத்துடன் அடுத்த வருடம் முதல் வழமை போன்று சாரதி அனுமதி அட்டைகளை வழங்க முடியும் எனவும் போக்குவரத்து அமைச்சின் செயலாளர் இதன்போது தெரிவித்தார்.

வட அமெரிக்கா

அமெரிக்க ஜனாதிபதி தேர்தல் – கருத்துக் கணிப்புகளில் முன்னிலை வகிக்கும் கமலா

  • August 24, 2024
  • 0 Comments

அமெரிக்க ஜனாதிபதி தேர்தலுக்கான கருத்துக் கணிப்புகளில் ஜனநாயகக் கட்சி வேட்பாளர் கமலா ஹாரிஸ் முன்னிலை வகிப்பதாக தெரியவந்துள்ளது. அவர் சுமார் 47 சதவீத ஆதரவைப் பெற்றிருக்கிறார். குடியரசுக் கட்சி வேட்பாளர் டொனல்ட் டிரம்ப் 3 புள்ளி குறைவாக சுமார் 44 சதவீத ஆதரவைப் பெற்றுள்ளார். பல்வேறு கருத்துக் கணிப்புகளைத் தொகுத்து அமெரிக்காவின் FiveThirtyEight இணையத்தளம் அந்த விவரத்தை வெளியிட்டிருக்கிறது. ஜனாதிபதி ஜோ பைடன் போட்டியில் இருந்து விலகிக் கொண்டு துணை ஜனாதிபதி கமலா ஹாரிஸை ஆதரிப்பதாக அறிவித்தபின் […]

செய்தி

ஓய்வை அறிவித்த இந்திய வீரர் ஷிகர் தவான்!

  • August 24, 2024
  • 0 Comments

இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர் ஷிகர் தவான் சர்வதேச மற்றும் உள்நாட்டு கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். கடந்த 13 ஆண்டுகளாக இந்திய அணிக்காக விளையாடி வந்தார் தவான். ஷிகர் தவான் இந்தியாவிற்காக இதுவரை 34 டெஸ்ட் போட்டிகள், 167 ஒருநாள் போட்டிகள் மற்றும் 68 டி20 போட்டிகளில் விளையாடியுள்ளார். 2010ம் ஆண்டு ஆஸ்திரேலியாவுக்கு எதிரான போட்டியில் அறிமுகமானார். 38 வயதான தவான் சர்வதேச மற்றும் உள்நாட்டு கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக தற்போது அறிவித்துள்ளார். […]

செய்தி

நீரிழிவு நோயாளிகளுக்கு ஆபத்தாகும் சில காய்கறிகள்…!

  • August 24, 2024
  • 0 Comments

இன்றைய காலகட்டத்தில் சர்க்கரை நோயாளிகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இன்றைய அவசர உலகில், ஆரோக்கியமற்ற உணவுமுறை மற்றும் வாழ்க்கை முறை காரணமாக நீரிழிவு நோய் மிக வேகமாக அதிகரித்து வருகின்றது. நீரிழிவு நோயாளிகள் இரத்த சர்க்கரை அளவை கட்டுக்குள் வைக்க தங்கள் உணவுகளில் அதிக கவனம் செலுத்த வேண்டும். உடலில் இரத்த சர்க்கரை அளவை கட்டுக்குள் இல்லை என்றால், உடல் உறுப்புக்கள் பாதிக்கப்படலாம். குறிப்பாக, கண்கள், சிறுநீரகம், இதயம் ஆகியவை பாதிக்கலாம். எனவே, நீரிழிவு […]

ஆஸ்திரேலியா செய்தி

அகதிகளை ஆஸ்திரேலியாவிற்கு அழைத்து வந்த தாய் மற்றும் மகளுக்கு கிடைத்த தண்டனை

  • August 24, 2024
  • 0 Comments

சட்டவிரோதமான முறையில் கடல் மார்க்கமாக ஆஸ்திரேலியாவிற்கு அகதிகளை அழைத்து வந்ததாக தாய் மற்றும் மகள் மீது நீதிமன்றத்தில் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது. சிட்னியில் கைது செய்யப்பட்டுள்ள 54 மற்றும் 32 வயதுடைய இந்த இரண்டு பெண்களுக்கும் படகு மூலம் அகதிகளை அழைத்து வந்த குற்றங்கள் நிரூபிக்கப்பட்டால் தலா 10 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்படும் என்று கூறப்படுகிறது. கடந்த ஏப்ரல் மாதம் மேற்கு ஈஸ்திரேலியாவின் கிம்பர்லி கடற்கரைக்கு சுமார் 15 பேர் படகு மூலம் வந்தமை தொடர்பில் இந்த வழக்கு விசாரணை […]

ஐரோப்பா செய்தி

ஜெர்மனியில் பரபரப்பை ஏற்படுத்திய கத்திக்குத்து தாக்குதல் – மூவர் பலி – பலர் காயம்

  • August 24, 2024
  • 0 Comments

ஜெர்மனியின் மேற்கு நகரமான சோலிங்கனில் இடம்பெற்ற கத்திக்குத்து தாக்குதலில் 3 பேர் உயிரிழந்துள்ளனர். விபத்தில் மேலும் 04 பேர் படுகாயமடைந்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன. சோலிங்கன் நகரம் நிறுவப்பட்டதன் 650வது ஆண்டு நிறைவைக் குறிக்கும் கொண்டாட்டத்தின் போது கத்தி தாக்குதல் நடத்தப்பட்டது. கத்திக்குத்து தாக்குதல் நடத்திய நபர் இதுவரை கைது செய்யப்படவில்லை. அவரை கைது செய்வதற்காக கொண்டாட்ட பகுதியில் விசேட சோதனைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் அந்நாட்டு பாதுகாப்பு தரப்பினர் தெரிவித்துள்ளனர்.

இலங்கை செய்தி முக்கிய செய்திகள்

இலங்கையில் 40 பேரின் உயிரை காப்பாற்றிய நிலையில் உயிர்விட்ட சாரதி

  • August 24, 2024
  • 0 Comments

அம்பாறையிலிருந்து கொழும்பு நோக்கிப் பயணித்த இலங்கை போக்குவரத்து சபை பேருந்தின் சாரதி ஒருவர் இரவு 8.15 மணியளவில் திடீரென மாரடைப்பு காரணமாக உயிரிழந்துள்ளார். பேருந்து வீதியை விட்டு விலகி நின்றதால் பயணிகள் உயிர் தப்பியதாக இகினியாகல பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர். நேற்று இரவு 7.00 மணியளவில் குறித்த பேருந்து அம்பாறை டிப்போவில் இருந்து கொழும்பு நோக்கிப் பேருந்து புறப்பட்டது. சாரதிக்கு ஏற்பட்ட சில சுகயீனம் காரணமாக இகினியாகல பாடசாலைக்கு அருகில் பேருந்தை நிறுத்திவிட்டு அந்த இடத்தில் இருந்த வைத்தியரிடம் […]

அறிவியல் & தொழில்நுட்பம் செய்தி

WhatsAppஇல் அடுத்தடுத்து சிறப்பான அப்டேட்களை வெளியிட தயாராகும் மெட்டா

  • August 24, 2024
  • 0 Comments

வாட்ஸ்அப்பில் அடுத்தடுத்து சிறப்பான அப்டேட்களை மெட்டா நிறுவனம் கொண்டவர தயாராக உள்ளது. வாட்ஸ்அப் செயலியை உலகில் கோடிக்கணக்கான பேர் உபயோகித்து வருகின்றனர். அதனைப் பயன்படுத்தும் பயனர்கள் நாளுக்கு நாள் புதிதாக அப்டேட்களை மெட்டா நிறுவனம் வழங்குவார்கள் என்று எதிர்பார்த்துக் கொண்டிருப்பார்கள். அதன்படி, தற்போது புதிதாகப் பல அப்டேட்களை விரைவில் அறிமுக செய்யவுள்ளதாகத் தகவல் தெரியவந்துள்ளது. வாட்ஸ்அப் பயனர்கள் வெகு நாட்களாகக் கேட்கும் ஒரு அப்டேட் தான் இந்த ‘யூசர் நேம்’. இந்த ‘யூசர் நேம்’ என்பது வேறொன்றும் […]

விளையாட்டு

“12 வீடியோ .. 9 ஷார்ட்ஸ்” – யூடியூப் மூலம் ரொனால்டோ சம்பாதித்த பணம்

  • August 24, 2024
  • 0 Comments

கால்பந்து ஜமாபவனான ரொனால்டோ தனது யூட்யூப் சேனல் மூலம் தற்போது வரை சில நூறு மில்லியனுக்கும் அதிகமாக சம்மதித்துள்ளார் என தகவல் வெளியாகியுள்ளது. கால்பந்து விளையாட்டில் மட்டுமல்லாது சமூகவலை தளங்களில் மிகவும் ஆக்டிவாக இருக்கும் ஒரு செலிபிரிட்டியாக இருப்பவர் தான் ‘கிறிஸ்டியானோ ரொனால்டோ’. இவர் 2 நாட்களுக்கு முன்பு புதிதாக “UR Ronaldo” என்ற ஒரு யூட்யூப் சேனலை தொடங்கினார். அவர் தொடங்கிய சில நிமிடங்களில் சுமார் 2.78 மில்லியன் யூடியூப் பயனர்கள் அவரது சேனலை சப்ஸ்க்ரைப் […]

ஐரோப்பா

ஐரோப்பிய நாடொன்றில் குடியுரிமை பெற்ற 11,000 வெளிநாட்டவர்கள்

  • August 24, 2024
  • 0 Comments

ஐரோப்பிய நாடான ஒஸ்ரியாவில் 2024 ஆம் ஆண்டின் முதல் பாதியில் மொத்தம் 11,050 பேர் குடியுரிமை பெற்றுள்ளனர். இது முந்தைய ஆண்டின் இதே காலகட்டத்துடன் ஒப்பிடுகையில் 66 சதவீதம் அதிகமாகும். 2024ஆம் ஆண்டு ஜனவரி முதல் ஜூன் வரையான காலப்பகுதியில் 4,125 பேர் ஒஸ்ரிய குடியுரிமையைப் பெற்றனர். அவர்களில் ஏழு பேரைத் தவிர மற்ற அனைவரும் வெளிநாட்டில் வசிக்கின்றனர். இருப்பினும், மற்ற குடியுரிமை பெற்ற குடிமக்களின் எண்ணிக்கையில் 18.3 சதவீதம் அதிகரித்து 6,925 ஆக இருந்தது, அவர்களில் […]

error: Content is protected !!