உலகம்

நைஜீரியாவில் பரீட்சையின் போது இடிந்து விழுந்த பாடசாலை – 21 பேர் பலி

  • July 13, 2024
  • 0 Comments

நைஜீரியாவில் பாடசாலையில் இடிந்து விழுந்ததில் 21 பேர் உயிரிழந்துள்ளனர். அவர்களில் பெரும்பாலானோர் தேர்வு எழுதிக்கொண்டிருந்த மாணவர்கள் என்று தகவல் கூறுகிறது. அந்தச் சம்பவம் ஜோஸ் நார்த் வட்டாரத்தின் செயின்ட் அகடமி (Saint Academy) பாடசாலையில் நடந்தது. 69 பேர் காயமுற்றனர். அவர்கள் வெவ்வேறு மருத்துவமனைகளில் சேர்க்கப்பட்டுள்ளனர். இடிபாடுகளில் சிக்கியிருக்கும் மாணவர்களைக் காப்பாற்றும் பணி மும்முரமாக நடைபெறுகிறது. பாடசாலை எதனால் இடிந்து விழுந்தது என்பது தெரியவில்லை. அந்தப் பகுதியில் 3 நாளாகக் கனத்த மழை பெய்ததாகக் குடியிருப்பாளர்கள் சிலர் […]

ஆஸ்திரேலியா

ஆஸ்திரேலியாவில் வீடு ஒன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் இருவர் பலி

  • July 13, 2024
  • 0 Comments

மெல்போர்னின் டோன்வால் பகுதியில் உள்ள வீடு ஒன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் இருவர் உயிரிழந்துள்ளனர். தீ விபத்தின் போது வீட்டினுள் இருந்த இருவர் உயிரிழந்துள்ளதாகவும் அவர்கள் இதுவரை அடையாளம் காணப்படவில்லை எனவும் தெரிவிக்கப்படுகின்றது. இந்த வீட்டில் இன்று அதிகாலை 4 மணியளவில் தீவிபத்து ஏற்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது. இது தொடர்பில் கிடைத்த தகவலின் பேரில் தீயணைப்பு படையினர் வந்து தீயை அணைக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர். குறித்த வீடு மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் பொலிஸ் அதிகாரிகள் விசாரணைகளை ஆரம்பித்துள்ளதுடன், […]

உலகம்

மெக்சிகோவை உலுக்கிய வெள்ளம் – குடியிருப்புகளில் புகுந்த 200 முதலைகள்

  • July 13, 2024
  • 0 Comments

மெக்சிகோவின் அடுத்தடுத்து வீசிய ஆல்பர்ட்டோ மற்றும் பெரில் புயல்களால் கடும் பாதிப்புகள் ஏற்பட்டுள்ளது. பெய்த கனமழை காரணமாக தமோலிபஸ் நகருக்குள் புகுந்த வெள்ளத்தோடு சேர்ந்து 200-க்கும் மேற்பட்ட முதலைகள் படையெடுத்துள்ளன. குடியிருப்புகளில் முதலை நுழைந்ததாக வந்த புகார்களின் பேரில் உடனுக்குடன் முதலைகளை பிடித்து காட்டிற்குள் விட்டதாக மீட்புப் படையினர் தெரிவித்தனர். இன்னும் சில வாரங்களுக்கு விலங்குகள் குடியிருப்பு பகுதிகளுக்கு வரும் பிரச்சனை நீடிக்க வாய்ப்புள்ளதாக மெக்சிகோ சிட்டி நிர்வாகத்தினர் தெரிவித்தனர்.  

செய்தி

புறப்பட்டுக்கொண்டிருந்த அமெரிக்க விமானத்தில் வெடித்த சக்கரம் – உயிர் தப்பிய பயணிகள்

  • July 13, 2024
  • 0 Comments

புறப்பட்டுக்கொண்டிருந்த அமெரிக்கன் ஏர்லைன்ஸ் விமானத்தின் சக்கரம் வெடித்தமையால் பதற்றமான சூழல் ஏற்பட்டுள்ளது. அமெரிக்காவின் புளோரிடா மாநிலத்தில் உள்ள Tampa அனைத்துலக விமான நிலையத்திலிருந்து புறப்பட்ட விமானமே இவ்வாறான நிலைக்குள்ளாகியுள்ளது. பீனிக்ஸ் நகருக்குச் சென்றுகொண்டிருந்த அந்த விமானத்தை விமானி உடனடியாக நிறுத்தினார். சம்பவ இடத்துக்கு அவசர மருத்துவ வாகனங்கள் வருவது காணொளியில் தெரிகிறது. விமானத்தில் 174 பயணிகளும் 6 விமானிகளும் இருந்ததாக விமான நிலையத்தின் பேச்சாளர் கூறினார். யாருக்கும் காயம் ஏற்படவில்லை. பயணிகளும் விமானிகளும் விமானத்திலிருந்து பத்திரமாக வெளியேற்றப்பட்டனர். […]

அறிவியல் & தொழில்நுட்பம்

அலுவலகங்களில் ஐபோன் மாத்திரமே பயன்படுத்த வேண்டும் – Microsoft அறிவிப்பு

  • July 13, 2024
  • 0 Comments

சீனாவில் தனது பணியாளர்களை அலுவல் சார்ந்த பணிகளுக்கு ஐபோன் பயன்படுத்தவும் அலுவலகங்களில் ஆண்ட்ராய்ட் போன்கள் பயன்பாட்டை தவிர்க்கவும் பாதுகாப்பு காரணங்களுக்காக மைக்ரோசாஃப்ட் நிறுவனம் அறிவித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. செப்டம்பர் ஆரம்பித்தது முதல் ஆண்ட்ராய்ட் கருவிகளுக்கு கார்ப்பரேட் அலுவலகங்களில் தடை விதித்த மைக்ரோசாஃப்ட் உலகளாவிய எதிர்கால பாதுகாப்பு முன்னெடுப்பின் பகுதியாக பணியாளர்களின் சைபர் பாதுகாப்பை உறுதி செய்ய அலுவலக சுற்றறிக்கையில் குறிப்பிட்டுள்ளதாக ப்ளூம்பெர்க் தெரிவித்துள்ளது. சீனாவில் பணியாற்றும் ஊழியர்கள் பணியகங்களில் தங்கள் அடையாளத்தை உறுதி செய்ய ஆப்பிள் கருவிகள் […]

விளையாட்டு

அபார சாதனையுடன் விடைபெற்ற ஜேம்ஸ் ஆண்டர்சன்

  • July 13, 2024
  • 0 Comments

இங்கிலாந்து அணியின் வேகப்பந்து வீச்சாளரான ஜேம்ஸ் ஆண்டர்சன் தற்போது மீண்டும் ஒரு புதிய மைல்கல் ரெக்கார்டை படைத்துள்ளார். வெஸ்ட் இண்டீஸ் அணி தற்போது இங்கிலாந்து அணியுடன் சுற்று பயணம் மேற்கொண்டு வருகிறது, இந்த சுற்று பயணத்தில் 3 டெஸ்ட் போட்டிகளில் இரண்டு அணிகளும் விளையாடவுள்ளது. இந்நிலையில், இன்று முதல் போட்டியானது முடிவடைந்துள்ளது. இந்த போட்டியில் இங்கிலாந்து அணியின் வேகப்பந்து வீச்சாளரான ஜேம்ஸ் ஆண்டர்சன் புதிய சாதனை படைத்துள்ளார். மேலும், இந்த முதல் போட்டியோடு அவர் டெஸ்ட் போட்டிகளில் […]

செய்தி வட அமெரிக்கா

கனடாவில் வீட்டு வாடகை தொகையில் ஏற்பட்டுள்ள மாற்றம்

  • July 13, 2024
  • 0 Comments

கனடாவின் சராசரி வீட்டு வாடகைத் தொகை வீதத்தில் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கனடாவின் முன்னணி வீட்டுமனை இணைய நிறுவனமொன்று மேற்கொண்ட ஆய்வில் இந்தத் தகவல் வெளியிடப்பட்டுள்ளது. வருடாந்த அறிக்கையுடன் ஒப்பிடும்போது வீட்டு உரிமையாளர்கள் ஆரம்பத்தில் கோரும் வீட்டு வாடகைத் தொகையில் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளதாகச் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. 2021ஆம் ஆண்டின் பின்னர் வீட்டு வாடகைத் தொகை அதிகளவில் வீழ்ச்சியடைந்த சந்தர்ப்பமாகக் கடந்த ஜூன் மாதம் பதிவாகியுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. கனடாவின் சராசரி வாடகைத் தொகையில் வீழ்ச்சி பதிவானது. இந்த நிலையில், […]

ஆசியா

சிங்கப்பூரில் தலைமுடியை வைத்து புதிய கண்டுபிடிப்புக்கு தயாராகும் அதிகாரிகள்

  • July 13, 2024
  • 0 Comments

சிங்கப்பூரில் போதைப்பொருள் உட்கொண்டவர்களை உடனே கண்டறிய தலைமுடிப் பரிசோதனைக் கருவியைப் பயன்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது. தலைமுடி என்பதால் கண்டுபிடிப்பதற்குக் கூடுதல் அவகாசம் கிடைக்கும். அத்துடன் சிறுநீரைக் கொண்டு பரிசோதிப்பதைக் காட்டிலும் இது ஆரோக்கியமான அணுகுமுறையாகவும் இருக்கும் என்று பரிசோதனை அதிகாரிகள் கருதுகின்றனர். புதிய பரிசோதனையின் மூலம் அதிகாரிகள் அடுத்த கட்ட நடவடிக்கையைத் துரிதமாக எடுக்க முடியும் என்று கூறப்பட்டது. மத்திய போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவின் வருடாந்திரப் பணித்திட்டக் கருத்தரங்கில் கருவி பற்றிய விவரங்கள் பகிர்ந்துகொள்ளப்பட்டன. இளையர்களிடையே அதிகரித்துவரும் போதைப்புழக்கத்தைக் […]

ஐரோப்பா செய்தி

ஜெர்மனியில் பண பரிமாற்ற நடவடிக்கையில் மாற்றம் – அமுலாகும் புதிய நடைமுறை

  • July 13, 2024
  • 0 Comments

ஜெர்மனியில் புதிய நடைமுறை ஒன்றை அமுல்படுத்துவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது. அதற்கமைய, பண பரிமாற்றம் தொடர்பாக புதிய நடைமுறை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. ஜெர்மனியில் பே பால்ட் என்று சொல்லப்படுகின்ற பணம் வழங்கும் நடைமுறைக்கு மாற்றீடாக புதிய ஒரு நடைமுறை முன்னெடுக்கப்பட்டுள்ளது. அதற்கமைய, வேரோ என்று சொல்லப்படுகின்ற புதிய நடைமுறையானது அமுல்படுத்தப்பட்டுள்ளது. பே பால்ட் என்று சொல்லப்படுகின்ற இந்த பணம் வழங்கும் நடைமுறைக்கு உரிய நிறுவனமானது அமெரிக்காவிற்கு சொந்தமானது. இந்நிலையில் ஐரோப்பாவிற்கு பொதுவான செயற்பாட்டு வேண்டுமென்பதால் ஐரோப்பாவில் 16 வங்கிகள் இந்த நடைமுறைக்கு […]

செய்தி

இலங்கையர்களுக்கு மகிழ்ச்சியான தகவல் வெளியிட்ட ஜனாதிபதி ரணில்

  • July 13, 2024
  • 0 Comments

இலங்கையில் 75,000 புதிய வேலைவாய்ப்புக்களும் உருவாக்கப்படவுள்ளதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். நிகழ்வொன்றில் உரையாற்றிய ஜனாதிபதி இதனை குறிப்பிட்டுள்ளார். இங்கு மேலும் கருத்து தெரிவித்த ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, “டொங்ஷியா நிறுவனம் 2018 இலங்கையில் வர்த்தகச் செயற்பாடுகளை ஆரம்பித்தது. வங்குரோத்து அடைந்த பின்னரும் நாட்டிலிருந்து புதிய தொழிற்சாலையை ஆரம்பித்துள்ளது. அதனால் 400 பேருக்கு வேலைவாய்பை வழங்க முடிந்துள்ளது. இந்த தொழிற்சாலை இளையோருக்கு சிறந்த எதிர்காலத்தை தோற்றுவிக்கும். நாட்டில் இதுபோன்ற பல தொழிற்சாலைகள் உருவாக வேண்டும். பிங்கிரிய பிரதேசத்தை […]

error: Content is protected !!