இலங்கை செய்தி

சவப் பெட்டியில் தான் இலங்கை செல்ல நேரிடும் – சவூதியில் உயிருக்கு போராடும் இலங்கை பணிப்பெண்

  • June 24, 2024
  • 0 Comments

“மூன்று நான்கு நாட்களாக என்னை ஒரு அறையில் வைத்து சாப்பிடவும் குடிக்கவும் விடாமல் அடித்துள்ளனர். இந்த வீட்டில் ஆறு பேர் செய்யும் வேலையை நான் செய்ய வேண்டும். அந்த வேலையைச் செய்வது கடினமாக இருந்ததால், கன்னத்தில் அறைந்து ஒரு அறையில் அடைத்து வைக்கப்பட்டேன். எனவே, நான் கொல்லப்படுவதற்கு முன்னர், தயவு செய்து என்னை விரைவில் இலங்கைக்கு அழைத்து வாருங்கள்” என சவூதியில் பணியாற்றும் இலங்கை பெண் ஒருவர் கோரிக்கை விடுத்துள்ளார். பொலன்னறுவை, மஹவுல்பத பகுதியைச்  சேர்ந்த 33 […]

இலங்கை செய்தி

சவப்பெட்டியில் இருந்த கணவன் – காதலனுடன் சென்ற இளம் மனைவிக்கு காத்திருந்த அதிர்ச்சி

  • June 24, 2024
  • 0 Comments

சவப்பெட்டியில் படுத்திருந்த யுவதியின் திருமணமான கணவன், காதலனுடன் பேய் வீடு ஒன்றுக்கு சென்ற போது, ​​அவரை தாக்க முற்பட்டதால் ஏற்பட்ட மோதலில் இருவரை கைது செய்ய நவகமுவ பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர். கைது செய்யப்பட்டவர்களை 2000 ரூபா சரீரப் பிணையில் விடுவிக்க கடுவெல நீதவான் உத்தரவிட்டுள்ளார். நவகமுவ ரணவல பிரதேசத்தில் வசிக்கும் 19 வயதுக்கும் 24 வயதுக்கும் இடைப்பட்ட 12 இளைஞர்கள் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர். நவகமுவ, ரணல பிரதேசத்தில் இளைஞர்கள் குழுவொன்று பொசன் போயாவை முன்னிட்டு பேய் […]

செய்தி விளையாட்டு

இந்திய அணியின் தலைவராகின்றார் சுப்மன் கில்

  • June 24, 2024
  • 0 Comments

ஜூலை மாதம் நடைபெறவுள்ள ஜிம்பாப்வே அணிக்கு எதிரான போட்டியில் இணைய சூர்யகுமார் யாதவ் மற்றும் ஹர்திக் பாண்டியா மறுத்துவிட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, ஜிம்பாப்வே அணிக்கு எதிரான 5 போட்டிகள் கொண்ட டுவென்டி-20 தொடரில் இந்திய அணியின் கேப்டனாக சுப்மன் கில் செயல்படுவார் என விளையாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. விராட் கோலி, ரோஹித் சர்மா, ரவீந்திர ஜடேஜா மற்றும் ஜஸ்பிரித் பும்ரா போன்ற இந்திய மூத்த வீரர்கள் டுவென்டி-20 உலகக் கோப்பைக்குப் பிறகு ஓய்வெடுக்க முடிவு […]

இலங்கை செய்தி

தாய் சித்திரவதை புரிவதாக யாழில் தஞ்சமடைந்த இந்திய சிறுவன்

  • June 24, 2024
  • 0 Comments

கொழும்பில் இருந்து யாழ்ப்பாணம் வந்து , பொலிஸ் நிலையத்தில் தஞ்சமடைந்த சிறுவன் மீள அவனது தாயாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளான். கொழும்பில் இருந்து யாழ்ப்பாணம் வந்த சிறுவன் ஒருவன் , தனது தாய் மற்றும் தாயின் இரண்டாவது கணவர் ஆகியோர் தன்னை அடித்து சித்திரவதை புரிவதாக கூறி யாழ்ப்பாண பொலிஸ் நிலையத்தில் தஞ்சமடைந்திருந்தான். சிறுவன் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்த போது , சிறுவன் வடஇந்தியாவை சேர்ந்தவன் எனவும் , அவனது தாய் கொழும்பில் கஸீனோவில் வேலை செய்வதாகவும் , இங்கு […]

இலங்கை செய்தி

கண்டிக்கு வந்தால் அடித்து விரட்டுவோம் – மைத்திரி தலைமையில் கூடிய கூட்டத்தில் ஆதரவாளர்கள் ஆவேசம்

  • June 24, 2024
  • 0 Comments

ஜனாதிபதித் தேர்தலில் வெற்றி பெற்றதன் பின்னர் கட்சித் தலைமைத்துவத்துடன் எந்தப் பிரச்சினையும் ஏற்படாது என ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தவிசாளர் விஜயதாச ராஜபக்ச தெரிவித்துள்ளார். கண்டியில் நேற்று (23) ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். கண்டி மாவட்ட ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பிரதேச பிரதிநிதிகள் கூட்டம் கட்சியின் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் அமைச்சர் விஜயதாச ராஜபக்ஷ தலைமையில் நேற்று நடைபெற்றது. “ஜனாதிபதி தேர்தலுக்கு வருகிறேன். நாங்கள் வெற்றி பெறுகிறோம் அதன்பிறகு, […]

செய்தி விளையாட்டு

WC Super 8 – ஆஸ்திரேலியா அணிக்கு 206 ஓட்டங்கள் இலக்கை நிர்ணயித்த இந்தியா

  • June 24, 2024
  • 0 Comments

டி20 தொடரில் இன்றைய ஆட்டத்தில் இந்தியா- ஆஸ்திரேலியா அணிகள் மோதி வருகின்றனர். இதில் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா பந்து வீச்சை தேர்வு செய்தது. அதன்படி இந்திய அணியின் தொடக்க வீரர்களாக ரோகித் – கோலி களமிறங்கினர். தொடக்கமே இந்திய அணிக்கு அதிர்ச்சி காத்திருந்தது. விராட் கோலி 0 ரன்னில் ஆட்டமிழந்தார். தொடர்ந்து விளையாடிய ரோகித் 19 பந்தில் அரை சதம் கடந்து அசத்தினார்.அடுத்து வந்த ரிஷப் பண்ட் 15 ரன்னில் ஆட்டமிழந்தார். தொடர்ந்து அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்திய […]

இலங்கை செய்தி

சிறுமியை பலாத்காரம் செய்ய நபருக்கு ஏற்பட்ட கதி – 30 ஆண்டுகள் சிறை

  • June 24, 2024
  • 0 Comments

16 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்ததாக குற்றம் சாட்டப்பட்ட நபருக்கு 30 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. பாணந்துறை மேல் நீதிமன்ற நீதிபதி சமன் குமார  குற்றவாளிக்கு இன்று (24) தண்டனை விதித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. மொரட்டுவை லக்ஷபதி கனகரத்ன மாவத்தையில் வசிக்கும் ரஜீவ ரவிநாத் ஜயதிலக்க என்ற 38 வயதுடைய நபருக்கே இவ்வாறு தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. 2021 ஜனவரி முதல் மார்ச் வரை 16 வயது சிறுமியை பலாத்காரம் செய்த குற்றச்சாட்டில் குற்றம் சாட்டப்பட்டவர் கொழும்பு சிறுவர் […]

ஆசியா செய்தி

இந்தோனேசியா தரவு மையத்தில் சைபர் தாக்குதல் – $8 மில்லியன் கப்பம் கோரிய ஹேக்கர்

  • June 24, 2024
  • 0 Comments

இந்தோனேசியாவின் தேசிய தரவு மையத்தின் மீதான சைபர் தாக்குதல் நூற்றுக்கணக்கான அரசாங்க அலுவலக தகவல்களை திருடியது மற்றும் தலைநகரின் முக்கிய விமான நிலையத்தில் நீண்ட தாமதத்தை ஏற்படுத்தியது. இதனை தொடர்ந்து ஹேக்கர் $ 8 மில்லியன் மீட்கும் தொகையை கோரியதாக அதிகாரிகள் தெரிவித்தனர். ரஷ்ய ransomware அமைப்பான LockBit உருவாக்கிய மென்பொருளைப் பயன்படுத்தி தாக்குதல் மேற்கொள்ளப்பட்டது. இந்தத் தாக்குதல் “தேசிய மற்றும் உள்ளூர் அளவில் 210 நிறுவனங்களை பாதித்தது” என்று மூத்த அதிகாரி செமுவேல் அப்ரிஜானி பங்கேரப்பன் […]

இலங்கை செய்தி

இலங்கையில் சிறைக்கு செல்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது

  • June 24, 2024
  • 0 Comments

திருட்டு மற்றும் கொள்ளைச் சம்பவங்களில் ஈடுபட்டு சிறையில் அடைக்கப்படுவோரின் எண்ணிக்கையில் குறிப்பிடத்தக்க அதிகரிப்பு காணப்படுவதாக சிறைச்சாலைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது. சிறைச்சாலைத் திணைக்களத்தின் அறிக்கையின்படி, இலங்கையில் திருட்டு மற்றும் கொள்ளைச் சம்பவங்களுடன் தொடர்புடைய 2021 இல் 1,202 பேரும், 2022 இல் 3,956 பேரும், 2023 இல் 5,687 பேரும் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இதன்படி, 2021ஆம் ஆண்டை விட இது 44 சதவீத வளர்ச்சியாகும். மேலும், 2021ல், திருட்டு மற்றும் கொள்ளை தொடர்பாக 19 பெண்கள் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். […]

இலங்கை செய்தி

மஹிந்த சிந்தனைக்கு உடன்படும் வேட்பாளருக்கு மொட்டுக் கட்சியின் ஆதரவு

  • June 24, 2024
  • 0 Comments

ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவினால் நியமிக்கப்படும் அல்லது ஆதரிக்கப்படும் வேட்பாளர் ‘மஹிந்த சிந்தனையுடன்’ உடன்பட்டு அந்தக் கொள்கைகளின் அடிப்படையில் நடக்க வேண்டும் என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் முக்கிய கூட்டம் ஒன்றின்போது தீர்மானிக்கப்பட்டுள்ளது. அத்துடன், ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் வேட்பாளர் நாட்டைப் பிளவுபடுத்த நினைக்கும் வேட்பாளராக இருக்கக் கூடாது என இன்று ஒன்று கூடிய அனைவரும் ஏகமனதாக தீர்மானம் எடுத்துள்ளனர். இது தொடர்பில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் செயலாளர், நாடாளுமன்ற உறுப்பினர் சாகர காரியவசம் கூறுகையில், ஶ்ரீலங்கா […]

error: Content is protected !!