இலங்கை செய்தி

இலங்கை ஜனாதிபதியின் உரையை அடுத்து பட்டாசு வெடித்து கொண்டாடிய மக்கள்

  • June 27, 2024
  • 0 Comments

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க நேற்று இரவு நாட்டு மக்களுக்கு உரையாற்றியதை மக்கள் கொண்டாடியுள்ளனர். ஜனாதிபதியின் விசேட உரையின் பின்னர் நாடு முழுவதும் பல பகுதிகளில் மக்கள் பட்டாசு கொளுத்தி கொண்டாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். சில இடங்களில் பெரிய திரைகளில் அதனை காட்சிப்படுத்தவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அதனையடுத்து திரைகளுக்கு முன்னாள் பாற்சோறு செய்தும் மக்கள் தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளனர். நாட்டை காப்பாற்றிய தலைவன் ரணில் என கூறி இசை மற்றும் நடனங்களிலும் மக்கள் ஈடுபட்டதனை அவதானிக்க முடிந்ததுள்ளது.

ஐரோப்பா

இன்னும் 30 நாட்கள் – பாரிஸ் ஒலிம்பிக் போட்டிக்கான ஏற்பாடுகள் தீவிரம்

  • June 27, 2024
  • 0 Comments

பாரிஸ் ஒலிம்பிக் போட்டிகள் தொடங்க இன்னும் 30 நாட்களே உள்ளது. இந்த நிலையில் விளையாட்டு போட்டிகள் நடத்தப்படும் மைதானங்களின் கட்டுமானம் மற்றும் சீரமைப்புப் பணிகள் இறுதி கட்டத்தை எட்டியுள்ளன. இரு நூறு நாடுகளைச் சேர்ந்த 10 ஆயிரத்து 500 வீரர் வீராங்கனைகள் பல்வேறு போட்டிகளில் பங்கேற்கும் வகையில் 35 மைதானங்கள் தயாராகியுள்ளன. பல்வேறு நாடுகளை சேர்ந்த 20 ஆயிரம் பத்திரிகையாளர்களும், 45 ஆயிரம் தன்னார்வலர்களும் வருகை தரவுள்ளதால் தங்குமிடங்களும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. போட்டி தொடக்கவிழா நடைபெறும் ஈஃபிள் […]

அறிவியல் & தொழில்நுட்பம்

WhatsApp வீடியோ மெசேஜ் அம்சத்தில் அறிமுகமாகும் புதிய வசதி

  • June 27, 2024
  • 0 Comments

வாட்ஸ்அப் உலகம் முழுவதும் ஏராளமான பயனர்களை கொண்டுள்ளது. பயனர்களின் வசதிக்கு ஏற்ப புதிய அம்சங்களை அறிமுகம் செய்து வருகிறது. அந்த வகையில் வாட்ஸ்அப் கடந்த வருடம் இன்ஸ்டன்ட் வீடியோ மெசேஜ் அம்சத்தை அறிமுகம் செய்தது. இதன் மூலம் பயனர்கள் வாட்ஸ்அப்பிலேயே வீடியோ ரெக்கார்ட் பதிவு செய்து அதை நண்பர்கள், உறவினர்களுக்கு அனுப்பலாம். இந்நிலையில், வாட்ஸ்அப் வீடியோ மெசேஜ் அம்சத்தில் குயிக் ரிப்ளை வசதி என்ற அம்சம் அறிமுகம் செய்ய உள்ளது. இதுதற்போது வாட்ஸ்அப் பீட்டா வெர்ஷனில் ஆண்ராய்ட் […]

இலங்கை

இலங்கையில் பாடசாலைகளின் கல்விச் செயற்பாடு குறித்து வெளியான அறிவிப்பு!

  • June 27, 2024
  • 0 Comments

இலங்கையில் இன்று அனைத்து அரச பாடசாலைகளின் கல்விச் செயற்பாடுகளும் வழமை போன்று இடம்பெறும் என கல்வி அமைச்சு அறிவித்துள்ளது. கல்வி அமைச்சு வெளியிட்டுள்ள அறிக்கையில் குறித்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆசிரியர், அதிபர்கள் இன்றைய தினமும் சுகவீன விடுமுறை போராட்டத்தை முன்னெடுக்கவுள்ள நிலையில் குறித்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதேவேளை, வேதனப் பிரச்சினை உள்ளிட்ட பல்வேறு விடயங்களை முன்னிறுத்தி, கொழும்பு – கோட்டை தொடருந்து நிலையத்திற்கு முன்னால் நேற்று குறித்த போராட்டம் ஆரம்பமானமை குறிப்பிடத்தக்கது

உலகம்

மெக்சிகோவில் உச்சக்கட்ட வெப்பம் – அழிந்துபோகும் அபாயத்தில் குரங்குகள்

  • June 27, 2024
  • 0 Comments

மெக்சிகோவில் 234 ஹொவ்லர் (howler) குரங்குகள் வெப்ப அலையில் உயிரிழந்துள்ளன. ஹொவ்லர் குரங்குகள் அருகிவரும் உயிரினமாகப் போற்றப்படுகின்றன. அழிந்துபோகும் அபாயத்தை எதிர்நோக்கி வரும் நிலையில் இந்த அபாயம் ஏற்பட்டுள்ளது. டபாஸ்கோ மாநிலத்தில் உள்ள காடுகளில் அவை உயிரிழந்துள்ளதாக Cobius என்கிற வனவிலங்கு லாப நோக்கமில்லா நிறுவனம் தெரிவித்தது. குறிப்பிட்ட சில இடங்களில் மட்டுமே குரங்குகள் உயிரிழந்த எண்ணிக்கையைக் கணக்கிட்டதாக நிறுவனம் குறிப்பிட்டுள்ளது. உண்மையான எண்ணிக்கை இன்னும் அதிகமாக இருக்கக்கூடும் என்று குறிப்பிட்டது. சென்ற மாதம் சுமார் 85 […]

ஐரோப்பா செய்தி

ஜெர்மனியில் பாடசாலை மாணவர்கள் மத்தியில் ஏற்பட்டுள்ள மாற்றம்

  • June 27, 2024
  • 0 Comments

ஜெர்மனியில் பாடசாலைகளில் இருந்து முற்று முழுதான கல்வி ஒன்றை நிறைவு செய்யாமல், வெளியேறுகின்ற மாணவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக தெரியவந்துள்ளது. ஜெர்மனியில் பாடசாலைகளில் கல்வியை முழுமையாக நிறைவு செய்யாமல் அதிகமான மாணவர்கள் வெளியேறுவது புள்ளி விபரம் வெளியாகியுள்ளது. அதாவது 2022 ஆம் ஆண்டு 2021 ஆம் ஆண்டுடன் ஒப்பிடும் பொழுது மொத்த மாணவர் தொகையில் 6.9 சதவீதமாக காணப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது. இந்நிலையில் 2021 ஆம் ஆண்டு இவ்வாறு பாடசாலை மாணவர்கள் தங்களது கல்வியை முற்றாக நிறைவு செய்யாமல், இடையிலேயே […]

இலங்கை செய்தி

வெளிநாடு ஒன்றில் இருந்து இலங்கை வந்தவருக்கு நேர்ந்த கதி

  • June 27, 2024
  • 0 Comments

வெளிநாடு ஒன்றில் இருந்து இலங்கை வந்தவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார். காலி பிரதேசத்தில் ஹபராதுவை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட உனவட்டுன கடலில் நீராடிக் கொண்டிருந்த மலேசியப் பிரஜை ஒருவரே நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளதாக ஹபராதுவை பொலிஸார் தெரிவித்தனர். இந்த சம்பவம் நேற்று முன்தினம் மாலை இடம்பெற்றுள்ளது. 61 வயதுடைய மலேசியப் பிரஜையொருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். இவர் உனவட்டுன கடலில் நீராடிக் கொண்டிருக்கும் போது திடீரென நீரில் மூழ்கியுள்ள நிலையில் பிரதேசவாசிகளால் காப்பாற்றப்பட்டு காலி கராப்பிட்டிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட […]

விளையாட்டு

ICC நடத்தை விதிகளை மீறிய ரஷீத் கான்

  • June 26, 2024
  • 0 Comments

பங்களாதேஷுக்கு எதிரான ஐசிசி ஆடவர் டி20 உலகக் கோப்பை 2024 குரூப் 1 போட்டியின் போது ஐசிசி நடத்தை விதிகளின் நிலை 1ஐ மீறியதற்காக ஆப்கானிஸ்தான் கேப்டன் ரஷீத் கான் கண்டிக்கப்பட்டுள்ளார். வீரர்கள் மற்றும் வீரர் ஆதரவு பணியாளர்களுக்கான ICC நடத்தை விதி 2.9ஐ ரஷித் மீறியதாகக் கண்டறியப்பட்டது. இது ஒரு பந்தை (அல்லது வேறு ஏதேனும் கிரிக்கெட் உபகரணங்களை) ஒரு வீரருக்கு அருகில் அல்லது பொருத்தமற்ற அல்லது ஆபத்தான முறையில் வீசுவது தொடர்பானது. இது தவிர, […]

விளையாட்டு

பதக்கம் வெல்லும் வீரர்களுக்கான பரிசுத் தொகையை அதிகரித்த ஒலிம்பிக் சங்கம்

  • June 26, 2024
  • 0 Comments

33வது ஒலிம்பிக் திருவிழா பிரான்ஸ் தலைநகர் பாரீசில் ஜூலை 26ம் தேதி தொடங்குகிறது. ஒலிம்பிக்கில் பங்கேற்கும் வீரர்களை ஊக்குவிக்கும் பொருட்டு பதக்கம் வெல்லும் வீரர்களுக்கு வழங்கப்பட்டு வரும் ஊக்கத் தொகையை அதிகரிக்க இந்திய ஒலிம்பிக் சங்கம் முடிவு செய்துள்ளது. இதன்படி பாரீஸ் ஒலிம்பிக்கில் தங்கப்பதக்கம் வெல்பவர்களுக்கு 1 கோடியும், வெள்ளிப்பதக்கம் பெறுபவர்களுக்கு 75 லட்சமும், வெண்கலப்பதக்கத்தை கைப்பற்றுபவர்களுக்கு 50 லட்சமும் வழங்கப்படுகிறது. கடந்த முறை முதல் 3 இடங்களை பிடித்தவர்களுக்கு முறையே 75 லட்சம், 40 லட்சம், […]

இந்தியா செய்தி

ஒடிசாவில் மின்னல் தாக்கி ஒரே நாளில் 5 பேர் பலி

  • June 26, 2024
  • 0 Comments

ஒடிசாவின் பர்கர் மற்றும் பலங்கிர் மாவட்டங்களில் மின்னல் தாக்கியதில் 5 பேர் உயிரிழந்தனர். பர்கர் மாவட்டத்தில் உள்ள தேவந்திஹி கிராமத்தைச் சேர்ந்த சுக்தேவ் பாஞ்சோர் (58), நிரோஜ் கும்பர் (25), மற்றும் தனுர்ஜ்யா நாயக் (45) ஆகியோர் கிராமத்திற்கு அருகே உள்ள ஒரு ஆலமரத்தின் கீழ் தஞ்சம் அடைந்துள்ளனர். மின்னல் தாக்கியதில் மூவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர், மேலும் இருவர் காயமடைந்தனர். மற்றொரு சம்பவத்தில், பலங்கிர் மாவட்டத்தில் உள்ள சவுல்பஞ்சி கிராமத்தைச் சேர்ந்த சூர்யகாந்தி கர்சல் (40) […]

error: Content is protected !!