ஆசியா செய்தி

ஐக்கிய அரபு எமிரேட்ஸுக்கு முக்கிய விஜயத்தை மேற்கொண்ட மூத்த ஹிஸ்புல்லா அதிகாரி

  • March 21, 2024
  • 0 Comments

ஈரான் ஆதரவு பெற்ற லெபனான் குழுவான ஹிஸ்புல்லாவின் மூத்த அதிகாரி ஒருவர் ஐக்கிய அரபு எமிரேட்ஸில் தடுத்து வைக்கப்பட்டுள்ள ஒரு டஜன் லெபனான் பிரஜைகளை விடுவிக்க வசதியாக ஒரு முக்கிய பயணத்தை மேற்கொண்டுள்ளார் என்று தெரிவிக்கப்பட்டது. ஐக்கிய அரபு எமிரேட்ஸின் அழைப்பின் பேரில் மேற்கொள்ளப்பட்ட இந்த விஜயம், ஷியா முஸ்லிம் ஹிஸ்புல்லாஹ் மற்றும் அமெரிக்காவின் மூலோபாய நட்பு நாடான சுன்னி முஸ்லீம் ஐக்கிய அரபு எமிரேட்ஸுக்கு இடையிலான நீண்டகால உறவை வரையறுக்கும் விரோதப் போக்கிலிருந்து குறிப்பிடத்தக்க மாற்றத்தைக் […]

செய்தி வட அமெரிக்கா

பெருவில் கண்டுபிடிக்கப்பட்ட 16 மில்லியன் ஆண்டுகள் பழமையான டால்பின் புதைபடிவம்

  • March 21, 2024
  • 0 Comments

பெரு நாட்டில் உள்ள அமேசான் மழைக்காட்டில் மிகப்பெரிய நதி டால்பின் புதைபடிவ மண்டை ஓட்டை விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். இது, 16 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு பெருவின் அமேசான் நதிகளில் தஞ்சம் அடைந்ததாகக் கருதப்படும் பெபனிஸ்டா யாகுருனா என்ற டால்பின் இனத்தில் மண்டை ஓடு என மதிப்பிடப்பட்டுள்ளது. அழிந்துபோன இனத்தைச் சேர்ந்த இந்த டால்பின் 3.5 மீட்டர் நீளம் வரை இருந்திருக்கும் என்றும், இது இதுவரை கண்டுபிடிக்கப்பட்ட நதி டால்பின்களில் இது மிகப்பெரிய டால்பின் என்றும் கூறப்பட்டுள்ளது. இந்த […]

ஐரோப்பா செய்தி

பணப் புழக்கத்தை குறைத்துள்ள சுவிஸ் மக்கள்

  • March 21, 2024
  • 0 Comments

சுவிட்சர்லாந்தில் பணப் பயன்பாடு கணிசமாகக் குறைந்துள்தாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் பெரிய அளவிலான ரூபாய் நோட்டுகள் புழக்கத்தில் உள்ளமை வெகுவாக குறைந்துள்ளது. உதாரணமாக, சமீபத்திய மாதங்களில் சுமார் 13 மில்லியன் 1000 பிராங்க் நோட்டுகள் சுவிஸ் நேஷனல் வங்கிக்கு திரும்பி வந்ததாக சுவிட்சர்லாந்து ஊடகம் ஒன்று சுட்டிக்காட்டியுள்ளது. மேலும் பொதுவாகப் பயன்படுத்தப்படும் 100 மற்றும் 200 பிராங் நோட்டுக்களும் குறைவான புழக்கத்தில் இருப்பதாக கூறப்படுகிறது. இவ்வாறான நிகழ்வுகளுக்கு காரணமாக சுவிட்சர்லாந்தின் குடியிருப்பாளர்கள் கிரெடிட் மற்றும் டெபிட் கார்டுகள் மற்றும் […]

இந்தியா செய்தி

பெய்ஜிங் கில்லர் ஏவுகணை சோதிக்கும் இந்தியா!! நோட்டமிடும் சீன உளவுக் கப்பல்

  • March 21, 2024
  • 0 Comments

வங்கக் கடலில் இந்தியா எச்சரிக்கை விடுத்துள்ளது. இந்தப் பகுதி எச்சரிக்கை சுமார் 1680 கி.மீ. இப்பகுதி ஏப்ரல் 3 மற்றும் 4 ஆம் திகதிகளில் பறக்கக்கூடாத பகுதியாக அறிவிக்கப்பட்டுள்ளது. கே-4 நீர்மூழ்கிக் கப்பலில் இருந்து ஏவக்கூடிய அணு ஆயுத ஏவுகணையை இந்தியா சோதனை செய்ய வாய்ப்புள்ளது. இது பெய்ஜிங் கில்லர் ஏவுகணை என்றும் அழைக்கப்படுகிறது.  அதன் வரம்பு 4000 கிமீக்கும் அதிகமாக உள்ளது. இந்த ஏவுகணை வழக்கமான போர்க்கப்பல் மூலம் அணுகுண்டு தாக்குதல் நடத்தும் திறன் கொண்டது. […]

ஆஸ்திரேலியா செய்தி

அவுஸ்திரேலியாவில் கடுமையாகும் விசா நடைமுறை!! இலங்கை மாணவர்களும் பாதிப்பு

  • March 21, 2024
  • 0 Comments

குடியேறிகளின் எண்ணிக்கை உச்சத்தை தொட்டதை அடுத்து சர்வதேச மாணவர்களுக்கான விசா நடைமுறையைக் அவுஸ்திரேலியா அரசாங்கம் கடுமையாக்கியுள்ளது. எதிர்வரும் சனிக்கிழமை (மார்ச் 23) முதல், மாணவர் விசா, பட்டதாரி விசா ஆகிய பிரிவுகளுக்கான ஆங்கிலமொழித் திறன் தேவை அதிகரிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. கல்வி நிலையங்கள் விதிமீறல்களில் ஈடுபட்டால் அனைத்துலக மாணவர்களைச் சேர்ப்பதற்கான அவற்றின் உரிமத்தை ரத்து செய்யப்படும் எனவும் அந்நாட்டு அரசாங்கம் அறிவித்துள்ளது. நாட்டின் குடியேற்ற நடைமுறையைச் சீராக்க அரசாங்கத்தின் கடப்பாட்டைக் காட்டும் இந்த நடவடிக்கைகள் தொடருமென்று உள்துறை […]

இந்தியா செய்தி

மருமகளை கொன்றுவிட்டு தற்கொலை செய்துகொண்ட மாமா

  • March 21, 2024
  • 0 Comments

இளம் பெண்ணை கழுத்தை அறுத்து கொன்றுவிட்டு மாமனார் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். குடும்ப தகராறு காரணமாக இந்த சம்பவம் நடந்துள்ளது. வடபரவூர் சேந்தமங்கலம் ஊராட்சிக்குட்பட்ட வடக்கும்புரு கொச்சங்காடியைச் சேர்ந்த கானப்பிள்ளி செபாஸ்டியன் (64) என்பவர் தனது மகன் சினோஜ் மனைவி ஷானுவை (34) கொன்றுவிட்டு தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டார். இச்சம்பவம் இன்று காலை 11 மணியளவில் இடம்பெற்றுள்ளது. இதுகுறித்து சினோஜ் கூறுகையில், மனைவிக்கும், தந்தைக்கும் இடையே அடிக்கடி சண்டை ஏற்பட்டு வந்தது. ஆறு மாதங்களுக்கு […]

செய்தி வட அமெரிக்கா

விவாகரத்து சட்டங்கள் மாற்றப்பட வேண்டும்; பெண்கள் பாலியல் வேலைநிறுத்தம்

  • March 21, 2024
  • 0 Comments

நியாயமற்ற விவாகரத்து சட்டங்களை மாற்றக் கோரி அமெரிக்காவில் பெண்கள் குழு ஒன்று பாலியல் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டது. நியூயார்க்கில் உள்ள கிரியாஸ் ஜோயலில் 800க்கும் மேற்பட்ட பெண்கள் முன்னோடியில்லாத போராட்டத்தைத் தொடங்கினர். அவர்கள் பல நூற்றாண்டுகள் பழமையான யூத சட்டத்தை மாற்ற விரும்புகிறார்கள். இந்த சட்டம் பெண்களுக்கு விவாகரத்து செய்வதை மிகவும் கடினமாக்குகிறது. விவாகரத்துக்கான கணவரின் எழுத்துப்பூர்வ ஒப்புதல் மிகவும் துஷ்பிரயோகம் செய்யப்பட்ட ஏற்பாடு. குடும்ப வன்முறை குறித்து பொலிசில் புகார் செய்யக்கூட பெண்கள் ரப்பிகளிடம் அனுமதி பெற […]

ஐரோப்பா செய்தி

பாரிஸில் இருந்துநூற்றுக்கணக்கான அகதிகள் வெளியேற்றம்

  • March 21, 2024
  • 0 Comments

பாரிஸில் இருந்து சிறுவர்கள் உள்ளிட்ட நூற்றுக்கணக்கான அகதிகள் வெளியேற்றப்பட்டனர். பாரிஸ் 12 ஆம் வட்டாரத்தில் உள்ள சுரங்கம் ஒன்றின் அருகே கூடாரங்கள் அமைத்து தங்கியிருந்த அகதிகளே நேற்று மார்ச் 20, புதன்கிழமை காலை வெளியேற்றப்பட்டனர். அகதிகளில் 14, 15 வயதுடைய சிறுவர்கள் உள்ளடங்கலாக மொத்தம் 120 அகதிகள் இருந்ததாகவும், பல தன்னார்வ தொண்டு நிறுவனங்களின் உதவியுடன் அவர்கள் வெளியேற்றப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஒலிம்பிக் போட்டிகளை முன்னிட்டு பரிசில் வசிக்கும் அகதிகள், வீடற்றவர்களை நாட்டின் வெவ்வேறு பகுதிகளுக்கு அனுப்பும் திட்டத்தை […]

இலங்கை செய்தி

யாழ்ப்பாண நீதிமன்றில் பொலிஸாருக்கு எதிராக வழக்குத் தாக்கல்

  • March 21, 2024
  • 0 Comments

பொலிஸார் நீதிமன்றை தவறாக வழிநடத்தி, நீதிமன்ற அதிகாரத்தை கீழ்மைப்படுத்துகிறார்கள் என யாழ்ப்பாண நீதிமன்றில் மன்றில் சட்டத்தரணி ஒருவர் மனு தாக்கல் செய்துள்ளார். யாழ்ப்பாண விசேட குற்றத்தடுப்பு பொலிஸ் பிரிவின் பொறுப்பதிகாரி மற்றும் கான்ஸ்டபில் ஒருவருக்கு எதிராகவே மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. காணி மோசடி வழக்கொன்றில் சட்டத்தரணி ஒருவர் நீதிமன்றில் முன் பிணை கோரியிருந்தார். இந்நிலையில் , நீதிமன்றில் பொலிஸார் தாக்கல் செய்த அறிக்கை ஒன்றில் “மனுதாரர் தான் செய்த குற்றத்தை உணர்ந்து, தன்னை பொலிஸார் எந்நேரமும் கைது […]

இலங்கை செய்தி

யாழ்ப்பாணத்தில் கனடா ஆசைக் காட்டி பணம் மோசடி செய்த பெண்

  • March 21, 2024
  • 0 Comments

கனடாவிற்கு அனுப்புவதாக லட்சக்கணக்கில் மோசடி செய்த பெண் ஒருவரை யாழ்ப்பாண பொலிஸார் கைது செய்துள்ளனர். யாழ்ப்பாணத்தைச் இளைஞனிடம் 60 இலட்ச ரூபாய் பணத்தினை மோசடி செய்த குற்றச்சாட்டிலேயே குறித்த பெண் கைது செய்யப்பட்டுள்ளார். மூன்று மாதங்களாக இளைஞனின் பயண ஏற்பாடுகள் நடைபெறாததால், இளைஞன் யாழ்ப்பாண பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்தார். முறைப்பாட்டின் பிரகாரம் விசாரணைகளை முன்னெடுத்த பொலிஸார் குறித்த பெண்ணை கைது செய்து யாழ். நீதவான் நீதிமன்றில் முற்படுத்தினர். நீதிமன்றில் தான் பெற்றுக்கொண்ட பணத்தினை மீள இளைஞனிடம் […]

error: Content is protected !!