அமெரிக்காவில் நீர்வீழ்ச்சியில் இருந்து தவறி விழுந்த பெண் பரிதாபமாக உயிரிழப்பு
அமெரிக்காவின் வடக்கு கரோலினாவில் உள்ள கிளாஸ்மைன் ஃபால்ஸ் ஓவர்லுக்கில் பெண் ஒருவர் அருவியில் இருந்து தவறி விழுந்து உயிரிழந்துள்ளார். வடக்கு கரோலினாவில் உள்ள புளூ ரிட்ஜ் பார்க்வேயில் உள்ள நீர்வீழ்ச்சிக்கு அருகே 150 அடி செங்குத்தான பாறையில் இருந்து தவறி விழுந்ததாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. 61 வயதான பெண் ஒருவரே உயிரிழந்துள்ளார். இயற்கை எழில் கொஞ்சும் தேசிய பூங்காவில் உள்ள கிளாஸ்மைன் ஃபால்ஸ் ஓவர்லுக்கில் பெண் ஒருவர் குன்றிலிருந்து தவறி விழுந்தது குறித்து அதிகாரிகளுக்கு […]













