இலங்கை செய்தி

புதையல் தோண்டிய 11 பேர் கைது

மட்டக்களப்பு வெல்லாவெளி பிரதேசத்தில் புதையல் தோண்டும் நடவடிக்கையில் ஈடுபட்ட இரு பெண்கள் உட்பட 11 பேர் இன்று (5) கைது செய்யப்பட்டுள்ளனர்.

பொலிசாருக்கு கிடைத்த இரகசிய தகவலுக்கு அமைய அதிகாலை
திக்கோடை ஆனந்தப் பிள்ளையார் கோவில் வீதியில் உள்ள வீடு ஒன்றை பொலிஸார் சுற்றிவளைப்பை மேற்கொண்டனர்.

இதன்போது புதையல் தோண்டும் நடவடிக்கையில் ஈடுபட்டுக் கொண்டிருந்த புத்தளம், அட்டாளைச்சேனை, கல்கமுவ, பெரிய போரதீவு, பெரியநீலாவணை, பொல்ஹாவலை, திக்கோடை பகுதிகளைச் சேர்ந்த இரு பெண்கள் உட்பட 11 பேரை கைது செய்தனர்.

அத்துடன் சந்தேகநபர்களை புதையல் தோண்டுவதற்காக பயன்படுத்திய நவீன ஸ்கானர் இயந்திரம் மற்றும் வேன் ஒன்றையும் பொலிஸார் பறிமுதல் செய்தனர்.

கைதானவர்களை நீதிமன்றில் முன்னிலைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

Sainth

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
error: Content is protected !!