உலகம் செய்தி

ஹார்முஸ் நீரிணையில் அமெரிக்கா அதிரடி முற்றுகை – முதல் 24 மணி நேரத்தில் எந்தக் கப்பலும் தாண்டவில்லை 

அமெரிக்கா ஹோர்முஸ் நீரிணையில் கடுமையான முற்றுகை நடவடிக்கையை மேற்கொண்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

அமெரிக்க மத்திய கட்டளைப் பிரிவு (CENTCOM) தெரிவித்ததாவது, முதல் 24 மணி நேரத்தில் அமெரிக்கா விதித்த முற்றுகையை எந்தக் கப்பலும் கடந்து செல்லவில்லை என கூறப்பட்டுள்ளது.

இந்த நடவடிக்கையில் ஒரு டஜன் போர்க்கப்பல்கள் மற்றும் விமானங்களுடன், 10,000-க்கும் மேற்பட்ட அமெரிக்க மாலுமிகள், கடற்படை வீரர்கள் மற்றும் விமானப்படை வீரர்கள் ஈடுபட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நடவடிக்கை, அமெரிக்க  ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் வழங்கிய உத்தரவின் கீழ், ஈரானிய துறைமுகங்களுக்கு வரும் மற்றும் செல்லும் கப்பல்களை கட்டுப்படுத்தும் நோக்கில் மேற்கொள்ளப்படுவதாக கூறப்படுகிறது.

CENTCOM வெளியிட்ட அறிக்கையில், இந்த முற்றுகை பாரபட்சமின்றி அமுல்படுத்தப்படுவதாகவும், ஈரானிய துறைமுகங்களுக்கு மட்டுமே பொருந்தும் என்றும், ஹார்முஸ் வழியாக செல்லும் மற்ற சர்வதேச கப்பல்களுக்கு “கப்பல் செல்லும் சுதந்திரம்” தொடரும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Sainth

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி
error: Content is protected !!