போர் நிறுத்த ஒப்பந்தத்தை மதிக்குமாறு பாகிஸ்தான் கோரிக்கை!
ஐக்கிய அரபு அமீரகத்தின் UAE சிவிலியன் கட்டமைப்புகள் மீது நடத்தப்பட்ட ஏவுகணை மற்றும் ட்ரோன் தாக்குதல்களை பாகிஸ்தான் பிரதமர் ஷேபாஸ் ஷெரீப் Shehbaz Sharif வன்மையாகக் கண்டித்துள்ளார்.
பிராந்தியத்தில் நிலையான அமைதியை நிலைநாட்ட, இருதரப்பும் போர்நிறுத்த ஒப்பந்தத்தை மதிக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
அமெரிக்காவிற்கும் ஈரானுக்கும் இடையே மத்தியஸ்தராகச் செயல்படும் பாகிஸ்தான், இது போன்ற வன்முறைச் சம்பவங்கள் பேச்சுவார்த்தைக்கான சூழலைச் சிதைப்பதாகக் கவலை வெளியிட்டுள்ளார்.
அதேவேளை, நிலைமை மேலும் மோசமடைவதைத் தவிர்க்க இரு நாடுகளும் தொடர்ந்து ராஜதந்திர ரீதியில் ஈடுபட வேண்டும் என்று பாகிஸ்தான் மக்கள் கட்சியின் தலைவர் பிலாவல் பூட்டோ ஜர்தாரி கேட்டுக் கொண்டுள்ளார்.





