(NEW UPDATE) தலாவ பேருந்து விபத்து – உயர்தர பரீட்சைக்கு தோற்றிய மாணவர் உயிரிழப்பு!
அனுராதபுரம் – தலாவ பகுதியில் விபத்துக்குள்ளான பேருந்தில் பயணித்த மாணவர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த விபத்து இன்று இடம்பெற்ற நிலையில், தற்போது விபத்து தொடர்பான மேலும் பல தகவல்கள் வெளியாகியுள்ளன.
பேருந்தில் 40க்கும் மேற்பட்ட பயணிகள் பயணித்ததாகவும், அவர்களில் குறைந்தது 40 பேர் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
தலாவ பகுதியில் இருந்து கிராமம் 411 க்கு பயணித்த தனியார் பேருந்தே விபத்தில் சிக்கியுள்ளது.
க.பொ.த உயர்தரப் பரீட்சை எழுதும் மாணவர்கள் பயணித்த பேருந்து விபத்து!
அனுராதபுரம் – தலாவ பகுதியில் உள்ள ஜெயகங்கா சாலையில் பேருந்தொன்று இன்று கவிழ்ந்து விபத்துக்குள்ளானதாக தெரிவிக்கப்படுகிறது.
க.பொ.த உயர்தரப் பரீட்சை எழுதும் பல மாணவர்கள் குறித்த பேருந்தில் பயணித்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
ஏறக்குறைய 20 பேர் காயமடைந்துள்ளதாகவும் அவர்கள் தம்புத்தேகம மற்றும் தலாவ மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.
சம்பவம் குறித்த மேலதிக விசாரணைகளை காவல்துறையினர் முன்னெடுத்து வருகின்றனர்.




