இலங்கை செய்தி

இலங்கையை உலுக்கிய குற்றக் கும்பல் – அதிரடி நடவடிக்கையில் யாழ் யுவதி சிக்கியது எப்படி?

குற்றக் கும்பலுடன் தொடர்புடைய இஷாரா செவ்வந்தி கும்பலிடம் சிங்களம் தெரியாத நிலையில் யாழ்ப்பாணத்தை சேர்ந்த தக்ஷி சிக்கியுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளன.

கணேமுல்ல சஞ்சீவ கொலை தொடர்பாக கைது செய்யப்பட்டுள்ள பயங்கரவாத தடை சட்டத்தின் கீழ் 90 நாட்களுக்கு தடுத்து வைக்கப்பட்டு விசாரிக்கப்பட்டு வருகிறார்.

இந்நிலையில் இஷாரா செவ்வந்தி பதுங்கியிருந்ததாக கூறப்படும் கிளிநொச்சி பகுதிக்கு நேற்று அவரை் அழைத்துச் செல்லப்பட்டார்.

சஞ்சீவ கொலையின் பின்னர் அவர் பல நாட்கள் மறைந்திருந்ததாகக் கூறப்படும் இடங்களை ஆய்வு செய்ய அழைத்துச் செல்லப்பட்டார்.

இந்த நிலையில் இஷாராவைப் போன்ற தோற்றமுடைய யுவதியை தேடிய யாழ்ப்பாண சுரேஷ், கெஹல்பத்தர பத்மேவின் அறிவுறுத்தலின் பேரில் தக்ஷி என்ற பெண்ணைச் சந்தித்ததாகக் கூறப்படுகிறது.

தக்ஷிக்கு சிங்களம் பேசத் தெரியாது என்பதனை சாதகமாக பயன்படுத்தி அவரை இந்த கும்பல் பயன்படுத்திக் கொண்டுள்ளதாக தெரியவந்துள்ளது.

தக்ஷியை வெளிநாட்டுக்கு அனுப்புவதாகவும் ஏமாற்றிய சுரேஷ் அவரை நேபாளத்திற்கு அழைத்துச் சென்றதாக பொலிஸார் தெரிவித்தனர்.

அதற்கமைய, தக்ஷிக்கு தெரியாமல் நேபாளத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டதாகக் கூறப்படுகிறது. நேபாளத்தில் செவ்வந்தி கைது செய்யப்பட்ட போது தக்ஷி மற்றுமொரு இடத்தில் கைது செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

(Visited 2 times, 3 visits today)

SR

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை