புட்டினுக்கு ஃபின்லாந்து ஒரு பாடமாக இருக்கட்டும் – பென் வாலஸ்
புட்டினுக்கு ஃபின்லாந்து ஒரு பாடமாக இருக்கட்டும் என இங்கிலாந்து பாதுகாப்பு செயலாளர் பென் வாலஸ் தெரிவித்துள்ளார்.
பின்லாந்து நேட்டோவில் இணைந்துள்ள நிலையில், பென் வாலஸ் இறையான்மையை கொண்ட நாடுகளின் உரிமைகளை உறுதிப்படுத்தும் அறிக்கையை வெளியிட்டுள்ளார்.
குறித்த அறிக்கையில், நேட்டோவில் இணைவதற்கான ஃபின்லாந்தின் விண்ணப்பம் இப்போது அங்கீகரிக்கப்பட்டதில் நான் மகிழ்ச்சியடைகிறேன். மேலும் அந்த அமைப்பை நான் வரவேற்க விரும்புகிறேன்” எனத் தெரிவித்துள்ளார்.
பின்லாந்து ஜனாதிபதி புடினுக்கு ஒரு பாடமாக இருக்கட்டும். பின்லாந்து தங்கள் சொந்த விருப்பத்தின் அடிப்படையில் சேரத் தேர்ந்தெடுத்தது. தங்கள் கூட்டணிகளை இறையாண்மை கொண்ட அரசாகத் தேர்ந்தெடுக்கும் சுதந்திரம் அவர்களின் குடிமக்கள் மற்றும் அவர்களது குடிமக்களுக்கு மட்டுமே உரியது” எனக் கூறியுள்ளார்.
(Visited 2 times, 1 visits today)