அமிதாப் பச்சனை சந்தித்த கமல்!
‘கல்கி 2898AD’ 2 படப்பிடிப்புத் தளத்தில் நடிகர்களான அமிதாப் பச்சனும், கமல்ஹாசனும் நேரில் சந்தித்துள்ளனர்.
தற்போது ‘கல்கி 2898AD’ 2 ஆம் பாகத்தின் படப்பிடிப்பு ஆரம்பிக்கப்பட்டு விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றது.
இந்த பாகத்தில் கமல்ஹாசனின் யாஸ்கின் கதாப்பாத்திரத்திற்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இருவரும் படப்பிடிப்பு தளத்தில் சந்தித்துள்ளனர்.
இது குறித்த படங்கள் இணையத்தில் கவனம் பெற்றுள்ளன.







