பிரான்ஸில் பெண்ணின் பாதணிக்குள் சிக்கிய மர்ம பொருள் – அதிர்ச்சியில் அதிகாரிகள்
பிரான்ஸில் பாதணியின் அடிப்பாகத்துக்குள் வைத்து இரண்டு கிலோ கொக்கைன் போதைப்பொருளைக் கடத்தப்பட்டுள்ளது.
இவ்வாறு போதை பொருள் கடத்திய பெண் ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
சனிக்கிழமை காலை Montparnasse ரயில் நிலையத்தில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.
23 வயதுடைய பெண் ஒருவரே இச்செயலில் ஈடுபட்டுள்ளார். அவரது நடவடிக்கையில் சந்தேகம் கொண்ட பொலிஸார் ரயில் நிலையத்தில் வைத்து விசாரணைகள் மேற்கொண்டனர்.
அதன்போது அவர் கொக்கைன் போதைப்பொருளை கடத்தியமை உறுதி செய்யப்பட்டுள்ளது.
உடனடியாக அவர் கைது செய்யப்பட்டு 7 ஆம் வட்டார காவல்நிலையத்துக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.
அவர் கடத்திய கொக்கைன் போதைப்பொருளின் மொத்த மதிப்பு 64,000 யூரோக்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இச்சம்பவம் தொடர்பில் விசாரணைகள் இடம்பெற்று வருகிறது.
(Visited 3 times, 1 visits today)