சபோர்ஜியா பிராந்தியத்தில் தோண்டப்பட்ட அகழிகள்!
சபோர்ஜியா பிராந்தியத்தின் ஆக்கிரமிக்கப்பட்ட பகுதிகளில் 70கி.மீ பள்ளத்தை ரஷ்ய படையினர் தோண்டியுள்ளதாக செய்தித்தாள் ஒன்று தெரிவித்துள்ளது.
நீண்ட மற்றும் உடைக்கப்படாத அகழி செயற்கைக்கோள் படங்களின் மூலம் இனங்காணப்பட்டுள்ளது. குறித்த பள்ளங்கள் தற்போதைய முன்வரிசைக்கு பின்னால் அமைந்துள்ளன.
குறித்த பள்ளம் சபோர்ஜியா பகுதியில் உள்ள ஆக்கிரமிக்கப்பட்ட நகரமான மெலிடோபோலில் இருந்து கிழக்கு டொனெஸ்க் பகுதியில் அமைந்துள்ள கிராமம் வரை நீண்டுள்ளது.
உக்ரைனின் பகுதிகளை கைப்பற்றிய ரஷ்ய படையினர் இவ்வாறான பள்ளங்களை தோண்டி வருவதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
(Visited 4 times, 1 visits today)