இலங்கை செய்தி

இலங்கைத் பெருந்தோட்ட தமிழர்கள் தொடர்பில் அண்ணாமலை வெளியிட்ட தகவல்!

இலங்கை பெருந்தோட்டங்களில் பணிபுரியும் தமிழர்களுக்கு வீடமைத்து கொடுப்பதால் அவர்களின் வாழ்க்கைத்தரம், சமூக மற்றும் பொருளாதார ரீதியில் மேம்படும் என பாரதீய ஜனதா கட்சியின் மாநிலத் தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவரது ட்விட்டரில் பதிவில்,இலங்கைத் தமிழர்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்துவதில் பிரதமர் நரேந்திர மோடி உறுதியாக இருப்பதாக தெரிவித்துள்ளார்.

“இந்தியாவில் இருந்து, சுமார் 200 வருடங்கள் முன்பு இலங்கையில் குடியேறிய மலையகத் தமிழர்களின் வாழ்வாதாரம் முன்னேற, தலா 28 லட்ச ரூபா மதிப்பில், 4000 வீடுகளை அமைக்கும் ஒப்பந்தம் இந்திய மற்றும் இலங்கை அரசாங்கங்களிடையே அண்மையில் கைச்சாத்தானது.

இந்தியாவின் நாகரிக இரட்டை நாடான இலங்கையில் வசிக்கும் தமிழ் மக்களின் முன்னேற்றத்திற்காக, பிரதமர் மோடி தொடர்ச்சியாக முன்னெடுத்து வரும் நலத்திட்டப் பணிகளில், இது ஒரு மைல்கல் ஆகும்” என பாரதீய ஜனதா கட்சியின் மாநிலத் தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

 

(Visited 7 times, 1 visits today)

hinduja

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
error: Content is protected !!