வெளிநாட்டில் தங்க இராணுவத்திடம் அனுமதி கோர வேண்டும் – ஜெர்மனியில் புதிய சட்டம்!
ஜெர்மனியின் இராணுவ சேவை நவீனமயமாக்கல் சட்டத்தில் கொண்டுவரப்பட்டுள்ள புதிய பிரிவின்படி, 17 முதல் 45 வயதுக்குட்பட்ட ஆண்கள் மூன்று மாதங்களுக்கு மேல் வெளிநாட்டில் தங்குவதற்கு முன்பு ஆயுதப் படைகளிடம் அனுமதி பெற வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த சட்டம் அடுத்த வருடம் ஜனவரி 1 முதல் அமலுக்கு வரவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கட்டாய இராணுவச் சேவை மறுபரிசீலனை செய்யப்படும் பட்சத்தில், ஒரு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இந்த திட்டம் கொண்டுவரப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், இது பெரும்பாலும் பயன்படுத்தப்படாத பனிப்போர் கால விதிமுறையை மீண்டும் கொண்டுவருவதாகவும் அரசாங்கம் விளக்கம் அளித்துள்ளது.
2035-ஆம் ஆண்டுக்குள் ஜெர்மனியின் ஆயுதப் படைகளின் எண்ணிக்கையை 255,000 முதல் 270,000 வரை அதிகரிக்கும் நோக்கத்துடன், அந்நாட்டின் இராணுவத்தை வலுப்படுத்த பல சீர்த்திருத்தங்கள் கொண்டுவரப்பட்டுள்ளன. இதன் ஒரு பகுதியாகவே மேற்படி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.





