பிரித்தானியாவில் நிரந்தரமாக குடியேற 30 ஆண்டுகள் காத்திருக்க வேண்டும்!
பிரித்தானியாவிற்கு சட்டவிரோதமாக புலம்பெயர்பவர்கள் நிரந்தரமாக குடியேற (அசேலம் கோர) 30 ஆண்டுகள் வரை காத்திருக்க வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
சட்டவிரோத புலம்பெயர்தலை தடுக்கும் வகையில் உள்துறை செயலாளர் ஷபானா மஹ்மூத் (Shabana Mahmood) பல புதிய திட்டங்களை அறிவித்துள்ளார்.
அத்திட்டங்களுக்கு அமைய புலம்பெயர்ந்தோர் பிரித்தானிய குடிமக்களாக மாறிய பின்னரே வீட்டு வசதி, சமூக உதவித் திட்டங்கள் உள்ளிட்ட நலத்திட்டங்ளை பெற தகுதி பெறுவார்கள் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன் குற்றவியல் பதிவுகள் தொடர்பில் சிறப்பு கவனம் செலுத்தப்படும். ஆங்கிலம் பேசுதல் A தரநிலையில் (A/L) இருத்தல் வேண்டும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
அதேநேரம் Indefinite Leave to Remain (ILR) காலவரையற்ற விடுப்புக்கு விண்ணப்பிக்க 10 வருடங்கள் காத்திருக்க வேண்டும் என கடந்த திங்கட்கிழமை அறிவிக்கப்பட்டது.
அதேபோல் அதிக வரி விகிதத்தை செல்லுத்துபவர்கள் 05 ஆண்டுகளும், உலகளாவிய திறமை விசாவில் உள்ள புலம்பெயர்ந்தோர் 03 ஆண்டுகளும் காத்திருந்தால் போதுமானது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மருத்துவர்கள் மற்றும் ஆசிரியர்கள் போன்ற ஒரு குறிப்பிட்ட மட்டத்தில் பொது சேவைகளில் பணிபுரிபவர்கள் ஐந்து ஆண்டுகளில் தகுதி பெறுவார்கள், அதே நேரத்தில் தன்னார்வத் தொண்டு செய்பவர்களின் தகுதி காலம் மூன்று முதல் ஐந்து ஆண்டுகள் வரை குறைக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
புதிய திட்டங்களுக்கு அமைய 2026 முதல் 2030 வரை 1.6 மில்லியன் பேர் இங்கிலாந்தில் குடியேறுவார்கள் என்றும், 2028 ஆம் ஆண்டில் 450,000 பேர் வரை குடியேறுவார்கள் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
Read more in English: https://www.gov.uk/government/news/biggest-overhaul-of-legal-migration-model-in-50-years-announced





