சூட்சுமமாக உடலில் போதைப்பொருளை மறைத்த பெண் – விமான நிலையத்தில் அதிரடியாக கைது
கட்டுநாயக்க விமான நிலையத்தில் சுமார் ஒரு கோடியே 23 இலட்சத்து 30 ஆயிரம் ரூபா பெறுமதியான
போதைப்பொருளுடன் பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
சுங்க போதைப்பொருள் தடுப்புப் பிரிவு அதிகாரிகளுக்குக் கிடைத்த புலனாய்வுத் தகவல்கள்களுக்கமைய முன்னெடுக்கப்பட்ட சோதனையின் போது இவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இவர் உகண்டாவின் கம்பாலா நகரிலிருந்து , கட்டார் நாட்டின் தோஹாவை வந்தடைந்து, பின்னர் கட்டாரிலிருந்து இன்று நாட்டை வந்தடைந்துள்ளார்.
அவரை முழுமையான சோதனைக்கு உட்படுத்திய போது, அவர் தனது உடலில் 21 மாத்திரைகளாக மறைத்து வைத்திருந்த 274 கிராம் கொக்கெய்ன் கண்டறியப்பட்டது.
அத்துடன், அவர் மேலும் சில கொக்கெய்ன் போதைப்பொருள் மாத்திரைகளை விழுங்கியிருக்கலாம் எனவும் அதிகாரிகள் சந்தேகிக்கின்றனர்.
குறித்த பெண் உகண்டா நாட்டைச் சேர்ந்த 47 வயதுடையவர் என தெரியவந்துள்ளது.
கைது செய்யப்பட்ட உகண்டா நாட்டுப் பெண் மேலதிக வைத்திய சிகிச்சை மற்றும் சட்ட நடவடிக்கைகளுக்காக கட்டுநாயக்க விமான நிலைய பொலிஸ் போதைப்பொருள் தடுப்புப் பிரிவினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.





