இலங்கை செய்தி

யாழில் சர்வதேச மைதான கட்டுமான பணி கைவிடப்படுமா?

யாழ். மண்டைதீவில் சர்வதேச கிரிக்கெட் மைதானம் அமைக்கும் திட்டம் தொடரும் என்று அமைச்சரவைப் பேச்சாளரும், அமைச்சருமான நளிந்த ஜயதிஸ்ஸ Nalinda Jayatissa தெரிவித்தார்.

சுற்றுச்சூழல் அனுமதி செயல்முறை முடியும்வரை கட்டுமான பணியை நிறுத்துமாறு மத்திய சுற்றுச்சூழல் அதிகாரசபை அறிவுறுத்தியுள்ளது.

அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் வாராந்த ஊடக சந்திப்பின்போது இது தொடர்பில் கேள்வி எழுப்பட்டது.
இதற்கு பதிலளித்த அமைச்சரவைப் பேச்சாளர் நளிந்த ஜயதிஸ்ஸ,

“ யாழ்.சர்வதேச விளையாட்டு மைதான கட்டுமான பணி நிச்சயம் முன்னெடுக்கப்பட வேண்டும்.

ஒரு திட்டத்தை முழுமைப்படுத்த வேண்டுமெனில் சில அறிக்கைகள் தேவைப்படும். சகல அமைச்சுகளுடன் இணைந்து கூட்டு முயற்சியாக அதற்குரிய நடவடிக்கை இடம்பெறும்.

மைதானம் அமைக்கும் வேலைத்திட்டத்தை விரைவில் முடிக்க வேண்டும் என்பதே எமது எதிர்பார்ப்பாகும்.” என அமைச்சர் மேலும் குறிப்பிட்டார்.

Dila

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
error: Content is protected !!