இலங்கை

கடவுச்சீட்டுக்களை பெற காத்திருப்போருக்கான முக்கிய அறிவிப்பு!

விண்ணப்பதாரர்கள் முறையான நடைமுறைகளைப் பின்பற்றத் தவறியதன் காரணமாக இணையவழி முறையில் கடவுச்சீட்டு வழங்கும் முறையானது பல சிக்கல்களை எதிர்கொண்டுள்ளதாக குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களம் தெரிவித்துள்ளது.

கைரேகைகளை முறையாகப் பதிவு செய்யாமை, சுயவிபர தகவல்களை முறையாகச் சமர்ப்பிக்கத் தவறியமை, இணையத்தளத்தில் பதிவு செய்வதற்குத் தேவையான ஆவணங்களை சமர்ப்பிக்கும் போது முறையான நடைமுறைகளைப் பின்பற்றாமை ஆகியன அடையாளம் காணப்பட்ட பிரச்சினைகளாகும் என திணைக்களத்தின் கட்டுப்பாட்டாளர் நாயகம் ஹர்ஷ இலுக்பிட்டிய சுட்டிக்காட்டினார்.

இணையவழி கடவுச்சீட்டு முறையின் ஊடாக சமர்ப்பிக்கப்பட்ட 35,000 விண்ணப்பங்களில், திணைக்களத்தினால் தற்போது 3,700 கடவுச்சீட்டுக்களை மட்டுமே வழங்க முடியும் என இலுக்பிட்டிய சுட்டிக்காட்டியுள்ளார்.

பொதுமக்கள் குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களம் அல்லது சம்பந்தப்பட்ட பிரதேச செயலாளர்களை தொடர்பு கொண்டு பிழைகளை திருத்திக் கொள்ளுமாறும், அதன் பின்னர் இணையவழி கடவுச்சீட்டுக்கான ஆவணங்களை சமர்ப்பிக்குமாறும் கோரப்பட்டுள்ளது.

இணையவழி கடவுச்சீட்டு முறை தொடர்பான அனைத்து தேவையான விவரங்களையும் குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்தின் உத்தியோகபூர்வ இணையத்தளத்திலிருந்து பெற்றுக்கொள்ள முடியும் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

(Visited 10 times, 1 visits today)
Avatar

TJenitha

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
இலங்கை செய்தி

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு!

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு! இலங்கையில் பெண்களிற்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு பெண்களிற்கு எதிரான சைபர்

You cannot copy content of this page

Skip to content