உலகம் செய்தி

அமெரிக்க கப்பல்களை மூழ்கடிப்போம் – ஈரான் சபதம்!

ஈரானின் உச்ச தலைவரான அயதுல்லா அலி கமேனி, மத்திய கிழக்கில் உள்ள எந்தவொரு அமெரிக்க விமானம் தாங்கிக் கப்பல்களையும் மூழ்கடிப்பதாக எச்சரிக்கை விடுத்துள்ளார்.

இந்த எச்சரிக்கையானது, ஜெனீவாவில் நடந்து வரும் அணுசக்தி பேச்சுவார்த்தைகளின் போது பதட்டங்களை அதிகரித்துள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இதற்கிடையே ஹார்முஸ் ஜலசந்தியில் ஈரான் போர் பயிற்சிகளை முன்னெடுத்து வருகிறது. இதன்காரணமாக அந்த பகுதியை மூடுவதாகவும் குறிப்பிட்டுள்ளது.

அத்துடன் ட்ரம்பின் முக்கிய கோரிக்கையான, செறிவூட்டப்பட்ட யுரேனியம் திட்டத்தை ஒருபோதும் கைவிடமாட்டோம்  என்றும் ஜனாதிபதி மசூத் பெஷேஷ்கியன் (Masoud Pezeshkian) உறுதிப்பட தெரிவித்துள்ளார்.

இவ்வாறான எச்சரிக்கைகள் மற்றும் முரண்பட்ட கருத்துக்கள் மத்திய கிழக்கில் போர் சூழலை உருவாக்கியுள்ளதாக சர்வதேச அரசியல் விமர்சகர்கள் தெரிவித்துள்ளனர்.

 

VD

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி
error: Content is protected !!