இலங்கை

இலங்கையில் முகக் க்ரீம்களை பயன்படுத்துவோருக்கு எச்சரிக்கை!

கொழும்பின் பகுதிகளில் பெண்களுக்கு ஆபத்தை ஏற்படுதும் அழகு சாதனை பொருட்கள் விற்பனை செய்யப்படுவதாக எச்சரிக்கப்பட்டுள்ளது.

புற்றுநோயை உண்டாக்கும் கிரீம்கள் உள்ளிட்ட அழகுசாதனப் பொருட்கள் விற்பனை செய்யப்படுவதாக, நுகர்வோர் விவகார அதிகாரசபையின் பொது ஊழியர் சங்கத்தின் செயலாளர் அஜித ஜயசுந்தர தெரிவித்திருந்தார்.

பெண்கள் தங்களை அழகுபடுத்தும் நோக்கில் ஆபத்தான கிரீம்களை பயன்படுத்துவதால புற்றுநோய் ஏற்படும் ஆபத்து உள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

‘Chandni’ எனும் வெளிநாட்டில் இருந்து கொண்டுவரப்படும் கிரீம்களில் ஈயம் அதிகளவு சேர்க்கப்பட்டுள்ளதாகவும் பாதரசத்தின் அளவும் அதிகம், கென்டியம் எனும் மூலப்பொருளும் அதிகளவு சேர்க்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

குறிப்பாக உலக சுகாதார ஸ்தாபனத்தினால் தடைசெய்யப்பட்ட கிரீம்கள் உள்ளிட்ட அழகுசாதனப் பொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாகவும் அவை இலங்கை சந்தையில் சூட்சமமாக விற்பனை செய்யப்படுவதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

(Visited 4 times, 1 visits today)

VD

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
இலங்கை செய்தி

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு!

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு! இலங்கையில் பெண்களிற்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு பெண்களிற்கு எதிரான சைபர்