நிலையற்ற தன்மை – சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை அதிகரிப்பு!
ஈரான், ஹார்முஸ் ஜலசந்தியை மீண்டும் திறக்க ஒப்புக்கொள்வதற்கான காலக்கெடு நெருங்கி வருவதால், சர்வதேச சந்தையில் இன்றைய தினம் மீளவும் கச்சா எண்ணெய்கான விலை அதிகரித்துள்ளது.
முதலீட்டாளர்களின் எச்சரிக்கை உணர்வின் காரணமாக விலை உயர்வு ஏற்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கமைய பிரென்ட் கச்சா எண்ணெய் விலை சுமார் 1.5% அதிகரித்து ஒரு பீப்பாய் 111.4 அமெரிக்க டாலராக உயர்ந்தது. இது தற்போது மோதலுக்கு முந்தைய விலையை விட 53% அதிகமாகும்.
இதனால் பெட்ரோல் மற்றும் டீசல் விலைகள் கடுமையாக உயர்ந்துள்ளன.
இதேவேளை உலகளாவிய நிதிச் சந்தைகள் நிலையற்ற தன்மையுடன் காணப்பட்டன. ஆரம்ப வர்த்தகத்தில் FTSE 100 குறியீடு உயர்ந்து தொடங்கி பின்னர் சரிந்தது, ஜெர்மனியின் Dax குறியீடு வீழ்ச்சியடைந்தது. மற்றும் பிரான்சின் Cac 40 குறியீடு உயர்ந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.





