பெலருஸ், ரஷ்ய பயணத்தை உறுதிப்படுத்தினார் விஜித ஹேரத்!
வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் அடுத்த மாதம் இரு நாடுகளுக்கு பயணம் மேற்கொள்ளவுள்ளார்.
பெலருஸ் Belarus மற்றும் ரஷ்யா Russia ஆகிய நாடுகளுக்கே அவர் விஜயம் செய்கின்றார் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
அடுத்த மாதம் நடுப்பகுதியில் இவ்விஜயம் இடம்பெறும் என்று அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்தார்.
அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் மாநாடு அரச தகவல் திணைக்களத்தில் இன்று (7) நடைபெற்றது.
இதன்போதே அமைச்சர் மேற்படி தகவலை வெளியிட்டார்.
“முதலில் பெலருஸ் நாட்டுக்கும், அங்கிருந்து ரஷ்யாவுக்கும் செல்வதற்கு திட்டமிட்டுள்ளேன்.” எனவும் அமைச்சர் குறிப்பிட்டார்.
இரு நாடுகளுக்கும் இடையிலான உறவை வலுப்படுத்தும் வகையிலேயே இவ்விஜயம் இடம்பெறவுள்ளது.





