சீனா பயணமாகும் அமெரிக்க இராஜாங்க செயலாளர்
அமெரிக்க இராஜாங்க செயலாளர் அந்தோனி பிளிங்கன் இந்த வாரம் சீனாவிற்கு விஜயம் செய்யவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
முன்னதாக, இராஜாங்கச் செயலாளர் பெப்ரவரி மாதம் சீனாவுக்கு விஜயம் செய்யவிருந்த நிலையில், இரு நாடுகளுக்கும் இடையிலான சர்ச்சைக்குரிய சூழ்நிலை காரணமாக அது ஒத்திவைக்கப்பட்டது.
எவ்வாறாயினும், அந்தோனி பிளிங்கன் ஜூன் 16 முதல் 21 வரை சீனாவுக்கு விஜயம் செய்ய உள்ளார்.
மேலும் பைடன் நிர்வாகத்தின் உயர் அதிகாரி ஒருவர் சீனாவுக்கு வருவது இதுவே முதல் முறை என்று வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
தனது விஜயத்தின் போது, சீனாவின் உயர்மட்ட அரசாங்கத் தலைவர்கள் பலரையும் சந்தித்து கலந்துரையாடவுள்ளதாகவும், இரு நாடுகளுக்குமிடையிலான இருதரப்பு விவகாரங்கள், உலகளாவிய மற்றும் பிராந்திய விவகாரங்கள் குறித்தும் கலந்துரையாடப்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.