உலகம் செய்தி

“ஈரானின் இதயம்”மீது அமெரிக்கா தாக்குத

ஈரான் கார்க் Kharg Island தீவிலுள்ள இராணுவ இலக்குகள்மீது அமெரிக்க படைகள் வான்வழித் தாக்குதலை நடத்தியுள்ளன என்று தெரியவருகின்றது.

சர்வதேச ஊடகங்கள் மேற்படி தகவலை உறுதிப்படுத்தியுள்ளன.

மேற்படி தாக்குதலில் ஈரானின் பொருளாதார மையமான எண்ணெய் கட்டமைப்புகளைப் பாதிக்கவில்லை என்பதை அமெரிக்க அதிகாரிகள் உறுதிப்படுத்தியுள்ளனர்.

ஈரானின் முக்கிய எண்ணெய் முனையமாக விளங்கும் இத்தீவை முற்றிலுமாக அழிப்பதாக அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் ஏற்கனவே எச்சரித்திருந்தார்.

எனவே, தற்போதைய சூழலில், குறித்த தீவை கைப்பற்றுவதற்காக அமெரிக்கா தனது படையினரை அங்கு அனுப்பக்கூடும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

இந்த நடவடிக்கை மத்திய கிழக்குப் பகுதியில் நிலவும் போர் பதற்றத்தை மேலும் அதிகரித்துள்ளது.

Dila

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி
error: Content is protected !!