இன்றைய முக்கிய செய்திகள் வட அமெரிக்கா

இந்தியா – பாகிஸ்தான் போர் அணு ஆயுதப் போராக மாறாது – அமெரிக்கா நம்பிக்கை

இந்தியா – பாகிஸ்தான் போர் அணு ஆயுதப் போராக மாறாதென அமெரிக்கா நம்பிக்கை வெளியிட்டுள்ளது.

தற்போதைய நிலையில், அணு ஆயுதப் போராக மாற வாய்ப்பில்லை என்று, அமெரிக்க துணை ஜனாதிபதி ஜே.டி.வான்ஸ் தெரிவித்துள்ளார்.

ஃபாக்ஸ் நியூஸ் தொலைக்காட்சிக்கு அவர் அளித்த பேட்டியில்,

இரு நாடுகளின் போருக்கு நடுவே தலையிடுவது தங்கள் வேலையில்லை என்றும், இரண்டு நாடுகளையும் ஆயுதங்களை கீழே போடுங்கள் என்று அமெரிக்காவால் கூற முடியாது என்றும் அவர் தெரிவித்தார்.

இதை ராஜாங்க ரீதியாக அணுகவே அமெரிக்கா விரும்புவதாகக் கூறிய அவர், இந்தப் போர் பிராந்திய அளவிலான போராகவோ அல்லது அணு ஆயுதப் போராகவோ மாறிவிடக் கூடாது என்பதே தங்களின் எதிர்பார்ப்பு என்றும் தெரிவித்தார்.

 

(Visited 9 times, 1 visits today)

SR

About Author

You may also like

செய்தி வட அமெரிக்கா

கனடாவில் வீட்டில் இரகசிய ஆயுத உற்பத்திச்சாலை!

கனடாவில் ஆயுத உற்பத்தியில் ஈடுபட்ட நபர் ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர். நோவா ஸ்கோட்டியாவின் மீகர்ஸ் கிரான்ட் என்னும் பகுதியின் வீடொன்றில் இந்த இரகசிய ஆயுத உற்பத்திச்சாலை
செய்தி வட அமெரிக்கா

அறுவைசிகிச்சை முடித்த பின் தெரிய வந்த உண்மை… கதறி அழுத தந்தை!

அமெரிக்காவைச் சேர்ந்த இளம்பெண் தன் தந்தைக்கே தெரியாமல், ரகசியமாக அவருக்குச் சிறுநீரக தானம் செய்துள்ள சம்பவத்தால், நெகிழ்ந்து போன தந்தையின் வீடியோ இணையத்தில் வைரல் ஆகியுள்ளது. அமெரிக்காவின்
error: Content is protected !!