அமெரிக்காவின் அதிரடி நடவடிக்கை – வெற்றிகரமாக நாடு கடத்தப்பட்ட ISIS போராளிகள்!
சிரியாவிலிருந்து ஈராக்கிற்கு 5,700 க்கும் மேற்பட்ட ISIS போராளிகள் என சந்தேகிக்கப்படும் நபர்கள் நாடு கடத்தப்பட்டுள்ளதாக அமெரிக்கா அறிவித்துள்ளது.
ஜனவரி 21 ஆம் திகதி ஆரம்பமாகிய மேற்படி பணிமாற்ற நடவடிக்கை கடந்த 23 நாட்களாக முன்னெடுக்கப்பட்டிருந்தது.
அமெரிக்கப் படைகள் 5,700 க்கும் மேற்பட்ட வயது வந்த ஆண் ISIS போராளிகளை சிரியாவில் உள்ள தடுப்பு மையங்களிலிருந்து ஈராக்கிய காவல் நிலையத்திற்கு வெற்றிகரமாக கொண்டு செல்லப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அமெரிக்க மத்திய கட்டளை (CENTCOM) எக்ஸ் பக்கத்தில் இட்டுள்ள அறிக்கையில், “ISIS கைதிகள் தடுப்பு மையங்களில் பாதுகாப்பாக இருப்பதை உறுதி செய்யும் வகையில் மேற்படி நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அமெரிக்கா முன்னர் சுமார் 7,000 கைதிகளை மாற்றுவதாக அறிவித்திருந்தது.




