உலகம்

மெக்சிகோவில் அமைதியின்மை : நகரமெங்கும் துப்பாக்கிச்சூடு சத்தம்!

மெக்சிகோ இராணுவம்  ஜலிஸ்கோ புதிய தலைமுறை  கார்டெலின்  தலைவரை சுட்டு கொலை செய்ததை தொடர்ந்து நகரமெங்கும் அமைதியின்மை ஏற்பட்டுள்ளது.

ஜலிஸ்கோ புதிய தலைமுறை கார்டெல் தலைவர் நெமேசியோ ரூபன் ஒசேகுரா செர்வாண்டஸ் (Nemesio Rubén Oseguera Cervantes) நேற்று இராணுவ நடவடிக்கையில் சுட்டுக் கொல்லப்பட்டார்.

ட்ரம்பின் நிர்வாகம் அவரை வெளிநாட்டு பயங்கரவாத அமைப்பின் தலைவராக அறிவித்துள்ளது.

இதனைத் தொடர்ந்து நகரம் முழுவதும் வன்முறைகள் வெடித்துள்ளன. துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டதுடன், வாகனங்கள் எரியூட்டப்பட்டுள்ளன.  மற்றும் பெட்ரோல் நிலையங்கள் தீக்கிரையாக்கப்பட்டுள்ளதுடன், சாலை தடைகளும் போடப்பட்டுள்ளன.

2009 இல் நிறுவப்பட்ட ஜலிஸ்கோ புதிய தலைமுறை கார்டெல் (CJNG), மெக்சிகோவில் போதைப்பொருள் மற்றும் பிற குற்றச்செயல்களுடனும் தொடர்புடையது.

அதன்  தலைவரான நெமேசியோ ரூபன் ஒசேகுரா செர்வாண்டஸை (“எல் மென்சோ)  கைது செய்ய அமெரிக்க இராணுவம் 15 மில்லியன் டொலர் வரையான வெகுமதியையும் அறிவித்திருந்தமை  குறிப்பிடத்தக்கது.

 

VD

About Author

You may also like

உலகம் விளையாட்டு

சாம்பியன்ஸ் லீக் அரையிறுதிக்கு முன்னேறிய ரியல் மாட்ரிட் மற்றும் ஏசி மிலன்

  • April 19, 2023
ரியல் மாட்ரிட் சாம்பியன்ஸ் லீக் அரையிறுதியில் செல்சிக்கு எதிராக 2-0 என்ற கணக்கில் வெற்றி பெற்றது, அது 4-0 என்ற மொத்த வெற்றியைப் பெற்றது, போராடிக்கொண்டிருந்த லண்டன்
உலகம் கருத்து & பகுப்பாய்வு

விராட் கோலி முதல் விஜய் வரை அனைவரது டுவிட்டர் கணக்குகளிலும் ப்ளூ டிக் நீக்கம்

  • April 21, 2023
டுவிட்டர் சந்தா செலுத்தாதவர்களின் கணக்குகளில் ப்ளூ டிக் நீக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது உலகின் மிகபெரிய பணக்காரரும், வாகன உற்பத்தி நிறுவனமான டெஸ்லாவின் தலைமை செயல் அதிகாரியான எலான் மஸ்க்
error: Content is protected !!