தென்கொரியாவின் சியோல் உள்ளிட்ட முக்கிய நகரங்களில் ஒன்றுக்கூடிய மருத்துவர்கள்!
மருத்துவ மாணவர்களின் எண்ணிக்கையை உயர்த்துவதற்கான அரசாங்கத் திட்டத்திற்கு எதிராக நூற்றுக்கணக்கான தென் கொரிய மருத்துவர்கள் ஒன்றிணைந்து பேரணி ஒன்றை நடத்தியுள்ளனர்.
தலைநகர் சியோல் உட்பட பிற நகரங்களிலும் இந்த பேரணி இன்று (15.02) நடத்தப்பட்டது.
2025 ஆம் ஆண்டிலிருந்து மருத்துவ மாணவர்களின் எண்ணிக்கையை 2,000 ஆக அதிகரிப்பது மிகவும் செங்குத்தானது என்று மருத்துவர் குழுக்கள் தெரிவித்துள்ளன.
இதேவேளை தென் கொரியாவுக்கு அதிக மருத்துவர்கள் தேவைப்படுவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
தென் கொரியாவும் உலகின் மிகக் குறைந்த பிறப்பு விகிதங்கள் கொண்ட நாடாக காணப்படுகிறது. இருப்பினும் மகப்பேறியல் மற்றும் குழந்தை மருத்துவம் உட்பட சில முக்கிய துறைகளில் மருத்துவர்களின் பற்றாக்குறை நிலவுகின்றது. இந்நிலையிலேயே மருத்துவ மாணவர்களின் எண்ணிக்கையை அதிகரிக்க அரசாங்கம் திட்டமிடுகிறது.
இருப்பினும் அரசின் முயற்சியை மருத்துவர்கள் கடந்த காலங்களில் வெற்றிகரமாக தோற்கடித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.