ஐரோப்பா

திடீரென நிறைவடைந்த உக்ரைன் – ரஷ்யா அமைதிப் பேச்சுவார்த்தை!! ஜெலென்ஸ்கி அதிருப்தி!

ரஷ்யா, உக்ரைன் மற்றும் அமெரிக்கா இடையிலான அமைதிப் பேச்சுவார்த்தைகள் இன்று திடீரென நிறைவடைந்ததாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இரண்டு மணிநேரம் மட்டுமே இடம்பெற்ற இன்றைய விவாதத்தின்போது போர்க் கைதிகளின் பரிமாற்றம் மற்றும் பொதுமக்களின் விடுதலை உள்ளிட்ட மனிதாபிமான பிரச்சினைகள் குறித்து முக்கியமாக கவனம் செலுத்தப்பட்டதாக கூறப்படுகிறது.

உக்ரைன் ஜனாதிபதி வோலோடிமிர் ஜெலென்ஸ்கி  (Volodymyr Zelensky) சமீபத்திய விவாதங்களை “கடினமானது” என்று விவரித்துள்ளார்.

ஆனால் எதிர்கால பேச்சுவார்த்தைகளைத் தொடர ஒரு ஒப்பந்தத்தை உறுதிப்படுத்திய அவர், கியேவ் மற்றும் மொஸ்கோ இடையே வேறுபட்ட நிலைப்பாடு காணப்படுவதாகவும் குறிப்பிட்டார்.

இதேவேளை கியேவ் தூதுக்குழுவின் தலைவரான ருஸ்டெம் உமெரோவ் (Rustem Umerov) பேச்சுவார்த்தைகள் சாதகமான பாதையில் இருப்பதாக கூறினார். அத்துடன் ஒரு நியாயமான மற்றும் நிலையான அமைதிக்கான உக்ரைனின் இலக்கை மீண்டும் வலியுறுத்தினார்.

VD

About Author

You may also like

ஐரோப்பா செய்தி

சாலையோர கடையில் தேநீர் – சாதாரண நபராக மாறிய ஜெர்மனி சான்ஸ்லர்

இந்தியாவுக்கு விஜயம் செய்துள்ள ஜெர்மனி சான்ஸ்லர் ஓலப் ஸ்கோல்ஸ் டில்லியில் உள்ள சாலையோர தேநீர்கடை ஒன்றில் தேநீர் அருந்திய புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அரசு
ஐரோப்பா செய்தி

ஜெர்மனியில் விசா உள்ளிட்ட ஒட்டுமொத்த சட்டதிட்டத்திலும் மாற்றம்

ஜெர்மனியில் விசா வழங்கும் முறையை மட்டும் அல்லாமல் ஒட்டுமொத்த சட்டதிட்டத்தையும் நவீனப்படுத்த உத்தேசித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஜெர்மனி சான்ஸ்லர் இதனை தெரிவித்துள்ளார். ஐரோப்பாவிலேயே மிகப்பெரிய பொருளாதார நாடாக இருக்கும்
error: Content is protected !!