உறுதியானது ட்ரம்பின் சீன விஜயம்: திகதியும் நிர்ணயம்!
அமெரிக்க US ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் Donald Trump சீன China விஜயம் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. அது தொடர்பான திகதி விபரமும் இறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
இதற்கமைய மார்ச் 31 ஆம் திகதி டொனால்ட் ட்ரம்ப், பீஜிங் Beijing செல்வார் எனவும், ஏப்ரல் 02 ஆம் திகதிவரை அங்கு தங்கி இருப்பார் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
டொனால்ட் டிரம்ப் கடந்த 4 ஆம் திகதி சீன ஜனாதிபதி ஜி ஜின்பிங்குடன் Xi Jinping தொலைபேசியில் உரையாடினார்.
இதன்போது சீனா வருமாறு ட்ரம்ப்புக்கு அழைப்பு விடுக்கப்பட்டது.
இந்த அழைப்பை ஏற்றே ட்ரம்ப் சீனா செல்கின்றார். சீன ஜனாதிபதி உட்பட முக்கிய தரப்புகளுடன் அவர் சந்திப்பு நடத்தவுள்ளார்.
உலகின் சக்திவாய்ந்த இரு நாடுகளுக்கும் இடையில் நல்ல நட்புறவு உள்ளது என்பதை சீனாவின் அழைப்பு வெளிப்படுத்தியது என ட்ரம்ப் குறிப்பிட்டுள்ளார்.




