போருக்கு மத்தியில் இராணுவ வரவு செலவு திட்டத்தை அதிகரிக்கும் ட்ரம்ப்!
ஈரானுடனான போர் தொடர்ந்து இடம்பெற்று வருகின்ற நிலையில், அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், 2027 நிதியாண்டிற்கான பாதுகாப்பு அல்லாத செலவினங்களில் 10 சதவீத குறைப்பையும், இராணுவ வரவுசெலவுத் திட்டத்தில் 500 பில்லியன் டொலர் அளவிலான மிகப்பெரிய அதிகரிப்பையும் கோரியுள்ளார்.
இந்த கோரிக்கையானது, ட்ரம்ப் வெளிநாடுகளில் அபாயகரமான தேர்வுகளை எதிர்கொள்ளும் வேளையில் வந்துள்ளது.
2026-ல் சுமார் 1 டிரில்லியன் டாலராக இருந்த பாதுகாப்புச் செலவினங்களை, 1.5 டிரில்லியன் டாலராக உயர்த்துவதற்கான இந்த முன்மொழிவில் இராணுவ வீரர்களுக்கு 5% முதல் 7% வரை ஊதிய உயர்வு வழங்கப்படுவதையும் சுட்டிக்காட்டியுள்ளது.
எவ்வாறாயினும் ட்ரம்பின் இந்த கோரிக்கையை செயற்படுத்த காங்கிரஸின் ஒப்புதல் தேவைப்படும். முன்னதாக ட்ரம்பின் செலவின முடிவுகள் குறித்த கருத்து வேறுபாடுகள், நீண்ட அரசாங்க முடக்கத்திற்கு வழிவகுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.




