“நேட்டோவுக்கான நிதி கடலில் போடும் பணம்:” ட்ரம்ப் கடுப்பு!
நேட்டோ NATO அமைப்புக்காக அமெரிக்கா டிரில்லியன் கணக்கிலான டொலர்களை செலவிடுவது தேவையற்றது என ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் விமர்சித்துள்ளார்.
ஈரான்மீதான ராணுவ நடவடிக்கைக்கு நேட்டோ நாடுகளின் உதவியை ட்ரம்ப் கோரி இருந்தார்.
எனினும், அந்த கோரிக்கையை நேட்டோ நாடுகள் நிராகரித்தன.
இதனையடுத்து நேட்டோமீது ட்ரம்ப் கடும் விமர்சனங்களை முன்வைத்தார். நோட்டோ அமைப்பு காகித புலி என்றுகூட முத்திரை குத்தி இருந்தார்.
எனவே, நேட்டோவுக்கான நிதி ஒதுக்கீடு தொடர்பில் இனி தீவிரமாகப் பரிசீலிக்கப் போவதாக ட்ரம்ப் எச்சரித்துள்ளார்.
இதன் மூலம் அமெரிக்கா நேட்டோவில் இருந்து வெளியேறுவதற்கான சாத்தியகூட ஏற்படலாம் என தகவல் வெளியாகியுள்ளது.




