ஈரான் போரில் ரோயல் ஏர் ஃபோர்ஸை பயன்படுத்த ட்ரம்ப் கோரிக்கை – பிரித்தானியா மறுப்பு!
பாலங்கள் அல்லது மின் உற்பத்தி நிலையங்கள் போன்ற ஈரானிய உள்கட்டமைப்புகள் மீதான தாக்குதல்களுக்காக, ரோயல் ஏர் ஃபோர்ஸ் (RAF) தளங்களைப் பயன்படுத்த அமெரிக்க ஜனாதிபதி கோரிக்கை விடுத்திருந்த நிலையில், அந்த கோரிக்கையை பிரித்தானியா மறுத்துள்ளது.
இன்று இரவு ஒரு முழு நாகரிகமே அழிந்துவிடும்” என்று எச்சரித்த டொனால்ட் ட்ரம்ப், தெஹ்ரான் தனது கோரிக்கைகளை நிறைவேற்றாவிட்டால் ஈரானிய குடிமக்கள் உள்கட்டமைப்புகளைத் தாக்குவோம் என அச்சுறுத்தியுள்ளார்.
பிரிட்டிஷ் தளங்களை அமெரிக்கா பயன்படுத்துவதற்கான இங்கிலாந்தின் ஒப்பந்தம், “பிராந்தியத்தின் கூட்டுத் தற்காப்பு” மற்றும் ஏவுகணைத் தளங்களுக்கு எதிரான தற்காப்பு நடவடிக்கைகளுக்காக மட்டுமேயன்றி, குடிமக்கள் இலக்குகளைத் தாக்குவதற்காக அல்ல பிரித்தானிய பிரதமர் கெய்ர் ஸ்டாமர் தெரிவித்துள்ளார்.
குடிமக்கள் உள்கட்டமைப்புகளைத் தாக்குவது ஒரு போர்க்குற்றமாக அமையக்கூடும் என்று சர்வதேச சட்ட வல்லுநர்கள் எச்சரித்துள்ளனர்.
இந்நிலையில் பிரித்தானியாவின் இந்த மறுப்பானது இருநாட்டு உறவில் விரிசல்களை ஏற்படுத்தும் என நிபுணர்கள் குறிப்பிட்டுள்ளனர்.





