வெனிசுலாவில் எண்ணெய் உற்பத்தியை அதிகரிப்பது தொடர்பில் ட்ரம்ப் ஆலோசனை!
வெனிசுலாவில் எண்ணெய் உற்பத்தியை அதிகரிப்பது தொடர்பில் அமெரிக்க நிறுவனங்களுடன் ஆலோசனை செய்ய ட்ரம்ப் திட்டமிட்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
இதற்கமைய இந்த வார இறுதியில் அமெரிக்க எண்ணெய் நிறுவனங்களின் நிர்வாகிகளைச் சந்திக்க ட்ரம்ப் தயாராகி வருவதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
அமெரிக்காவின் மூன்று பெரிய எண்ணெய் நிறுவனங்களான எக்ஸான் மொபில் (Exxon Mobil), கோனோகோபிலிப்ஸ் (ConocoPhillips) மற்றும் செவ்ரான் (Chevron) ஆகியவை மதுரோவின் வெளியேற்றம் குறித்து எந்த பேச்சுவார்த்தைகளையும் இதுவரை நடத்தவில்லை எனக் கூறப்படுகிறது.
தென் அமெரிக்க நாட்டிற்குள் அமெரிக்காவின் உயர்மட்ட எண்ணெய் நிறுவனங்களை மீண்டும் நிறுவுவதற்கு ட்ரம்ப் முயற்சித்து வருகின்ற சூழ்நிலையில், மேற்படி நிறுவனங்களின் ஆதரவையும் ட்ரம்ப் எதிர்பார்த்துள்ளார்.
ஆகவே வர இருக்கும் வாரங்களில் இது தொடர்பில் விரிவான பேச்சுவார்த்தைகள் முன்னெடுக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.





