ஐரோப்பா

சுவிட்சர்லாந்தில் ரயில் தடம் புரண்டு விபத்து – 05 பேர் படுகாயம்!

சுவிட்சர்லாந்தின் ஆல்ப்ஸ் மலைத்தொடருக்கு அருகே இன்று ஏற்பட்ட பனிச்சரிவால் ரயில் ஒன்று தடம் புரண்டு விபத்துக்குள்ளாகியுள்ளது.

குறித்த ரயிலில் 29 பேர்  பயணித்த நிலையில், அதில் 05 பேர் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. ஒருவர் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டதாகவும், ஏனைய 04 பேருக்கு சம்பவ இடத்திலேயே சிகிச்சையளிக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது.

விபத்தின் சரியான சூழ்நிலைகளைக் கண்டறிய அரசு வழக்கறிஞர் அலுவலகம் விசாரணையைத் தொடங்கியுள்ளது.

இதேவேளை குறித்த   ரயில் பாதை, குறைந்தபட்சம் நாளைக் காலை வரை மூடப்பட்டிருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் கடுமையான வானிலை காரணமாக  வாலெய்ஸ் (Valais) மாகாணத்தில் உள்ள லா ஃபூலி  (La Fouly) என்ற கிராமத்தில் உள்ள மக்கள் வெளியேற்றப்பட்டுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

 

VD

About Author

You may also like

ஐரோப்பா செய்தி

சாலையோர கடையில் தேநீர் – சாதாரண நபராக மாறிய ஜெர்மனி சான்ஸ்லர்

இந்தியாவுக்கு விஜயம் செய்துள்ள ஜெர்மனி சான்ஸ்லர் ஓலப் ஸ்கோல்ஸ் டில்லியில் உள்ள சாலையோர தேநீர்கடை ஒன்றில் தேநீர் அருந்திய புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அரசு
ஐரோப்பா செய்தி

ஜெர்மனியில் விசா உள்ளிட்ட ஒட்டுமொத்த சட்டதிட்டத்திலும் மாற்றம்

ஜெர்மனியில் விசா வழங்கும் முறையை மட்டும் அல்லாமல் ஒட்டுமொத்த சட்டதிட்டத்தையும் நவீனப்படுத்த உத்தேசித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஜெர்மனி சான்ஸ்லர் இதனை தெரிவித்துள்ளார். ஐரோப்பாவிலேயே மிகப்பெரிய பொருளாதார நாடாக இருக்கும்
error: Content is protected !!