நைஜீரியாவில் நச்சுவாயு கசிவு – 37 பேர் உயிரிழப்பு!! பலர் வைத்தியசாலையில்!
நைஜீரியாவில் உள்ள சுரங்கமொன்றில் நச்சுவாயு கசிவு காரணமாக 37 பேர் உயிரிழந்துள்ளதுடன், 26 பேர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
ஈயம், சல்பர் மற்றும் கார்பன் மோனாக்சைடு ஆகிய வாயுக்கள் திடீரென வெளிப்பட்டதால் நிலத்தடியில் வேலை செய்து கொண்டிருந்த தொழிலாளர்கள் உயிரிழந்ததாக தெரிவிக்கப்படுகிறது.
நைஜீரிய அரசாங்கத்தின் கூற்றுப்படி, அவர்கள் உடல்நிலை சரியில்லாமல் போகும் வரை கொடிய புகையை சுவாசிப்பதை உணரவில்லை எனத் தெரிவித்துள்ளனர்.
இறந்தவர்களின் உடல்கள் அவர்களின் மத நடைமுறைகளின்படி அடக்கம் செய்வதற்காக குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன் நைஜீரிய அரசாங்கம் சுரங்க தளத்தை மூடியுள்ளதாகவும், வாயு கசிவு குறித்து விசாரணைகளை முன்னெடுத்து வருவதாகவும் தெரிவித்துள்ளது.





