தன் இரு குழந்தைகளை எரித்து கொன்று விட்டு.. தாய் எடுத்த விபரீத முடிவு!
கர்நாடகா மாநிலம், சித்ரதுர்கா மாவட்டம் சல்லகெரேவில் உள்ள மல்லசமுத்ரா கிராமத்தைச் சேர்ந்தவர் மரக்கா(24). இவருக்கு திருமணமாகி நயனா(4), ஹர்ஷவர்தன்(2) என்ற இரண்டு குழந்தைகள் இருந்தனர்.
இந்த நிலையில், மல்லசமுத்ரா கிராமத்தின் ஒதுக்குப்புறத்தில் இன்று காலை மூன்று பேர், உடல் கருகி நிலையில் இறந்து கிடந்தனர். இதைப் பார்த்து அதிர்ச்சியடைந்த அப்பகுதி மக்கள், சாலக்கரை பொலிஸாருக்குத் தகவல் தெரிவித்தனர். உடனடியாக சம்பவ இடத்திற்கு வந்த சாலக்கரை பொலிஸார், தீயில் கருகி கிடந்த மூன்று உடல்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
அவர்கள் விசாரணை நடத்திய போது, தீயில் கருகி உயிரிழந்தது மரக்காவும், அவரது இரண்டு குழந்தைகளும் என்பது தெரிய வந்தது. குடும்பத் தகராறு காரணமாக, தனது குழந்தைகளை வீட்டில் இருந்து அழைத்து வந்து பெட்ரோலை அவர்கள் மீது ஊற்றி தீ வைத்த மரக்கா, அதன் பின் அவரும் தீக்குளித்து இறந்து கொண்டது விசாரணையில் தெரிய வந்தது.
மூன்று பேரின் உயிரிழப்பிற்கு காரணம் குடும்பச் சண்டையா அல்லது வேறு பிரச்சினையா என சாலக்கரை பொலிஸார் விசாரித்து வருகின்றனர். தனது 2 குழந்தைகளை தீ வைத்து எரித்து தாய் தற்கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.