தாயை கொலைசெய்து, தலையை துண்டித்து விளையாடிய மகன்
74 வயது தாயின் கழுத்தை நெரித்ததற்காக நியூ ஜெர்சி பொலிசார் 46 வயதான ஜெஃப்ரி சார்ஜென்ட் என்பவரை கைது செய்தனர்.
வெள்ளிக்கிழமை மாலை நான்கு மணியளவில் கொலையைச் செய்த பின்னர், ஜெஃப்ரி அவரே காவல்துறையின் அவசர எண்ணை அழைத்து கொலை குறித்து தெரிவித்தார்.
ஜெஃப்ரி தனது தாயை அலெக்ஸாண்ட்ரியாவைக் கொன்றதாகவும், தனக்கு இருமுனைக் கோளாறு இருப்பதாகவும் பொலிஸிடம் கூறினார்.
ஜெஃப்ரியும் அவரது தாயும் வசித்த ஓஷன் சிட்டி அடுக்குமாடி குடியிருப்பிற்கு பொலிசார் வந்தபோது, காட்சி அதிர்ச்சியாக இருந்தது. ஜெஃப்ரி, தலை துண்டிக்கப்பட்ட நிலையில் அவரது தாயார் அலெக்ஸாண்ட்ரியாவின் உடலின் மேல் ரத்த வெள்ளத்தில் நிர்வாணமாக கிடந்தார்.
காவல்துறையினரைப் பார்த்தவுடன், தனது தாயைக் கொன்றுவிட்டதாகவும், அதற்காக மிகவும் வருந்துவதாகவும் ஜெஃப்ரி கதறி அழுதார். ஜெஃப்ரியின் தாயைக் கொல்லப் பயன்படுத்திய கத்தியை பொலிஸார் வீட்டில் இருந்து மீட்டனர்.
மேலும் அவரது தாயார் அலெக்ஸாண்டிரியாவின் தலை, அவரது உடலிலிருந்து பிரிந்து கிடந்ததை, பக்கத்து அறையில் இருந்து பொலிசார் கண்டுபிடித்தனர்.
குடியிருப்பில் இருந்த பாதுகாப்பு கேமராவில் இருந்து கொலை நடந்த காட்சிகளை பொலிசார் மீட்டனர்.
பொலிஸாரின் அறிக்கையின்படி, கொலையின் பின்னர், தாயின் தலையை தூக்கி எறிந்து விளையாடியதாகவும், பொலிசார் வந்ததும், அவர் ஓடிச்சென்று சடலத்தின் மீது கிடந்தது பாதுகாப்பு கேமராவில் பதிவாகியுள்ளது.
ஜெஃப்ரி மீது கொலைக் குற்றச்சாட்டின் கீழ் பொலிசார் வழக்குப்பதிவு செய்தனர். ஜெஃப்ரி இருமுனைக் கோளாறு உள்ளவர் என்பதால் கைது செய்யப்பட்ட பிறகு அவருக்கு மருத்துவப் பரிசோதனை செய்யப்பட்டது.