புதிய போப்பை தேர்ந்தெடுக்கும் நடவடிக்கை – தேவாலயத்தில் அமைக்கப்பட்ட புகைபோக்கி

புதிய போப்பைத் தேர்ந்தெடுக்கும் பேராயர்களின் கூட்டம் இன்று வத்திகனில் தொடங்குகிறது.
133 பேராயர்கள் தனிமையில் அந்தப் பணியை மேற்கொள்வர். இதனை முன்னிட்டு Sistine Chapel தேவாலயத்தின் கூரையில் புகைபோக்கி அமைக்கப்பட்டுள்ளது.
அதிலிருந்து கரும்புகை வந்தால் வாக்களிப்பில் பெரும்பான்மை எட்டப்படவில்லை என்று அர்த்தம். வெண்புகை வந்தால் புதிய போப் தேர்ந்தெடுக்கப்பட்டுவிட்டார் என்று பொருள்படும்.
உள்ளூர் நேரப்படி காலை 10 மணிக்கு வத்திகனில் கூட்டு வழிபாடு தொடங்கும். பின்னர் மாலை 4.30 மணிக்குப் பேராயர்கள் ரகசியப் பிரமாணம் எடுத்துக் கொள்வர்.
அதன் பின்னர் தேவாலயத்தின் கதவுகள் மூடப்படும். முதல் வாக்களிப்பு இன்று மாலை நடத்தப்படலாம்.
(Visited 2 times, 2 visits today)