ஜப்பான் அரசாங்கத்திற்கு 21 கிலோ தங்கக் கட்டிகளை பரிசளித்த நபர்!
ஜப்பானில் உள்ள ஒசாகாவின் நகராட்சி நீர்வழிப் பணியகத்திற்கு £2.7 மில்லியன் மதிப்புள்ள 21 கிலோ தங்கக் கட்டிகளை பெயர் குறிப்பிடாத நபர் ஒருவர் நன்கொடையாக வழங்கியுள்ளார்.
கடந்த 2025 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் இந்த நன்கொடை வழங்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
ஜப்பான் முழுவதும் பல நகரங்களைப் பாதிக்கும் ஒரு குறிப்பிடத்தக்க கவலையான கழிவுநீர் பராமரிப்பை சிறந்த முறையில் மேற்கொள்ள இந்த பணம் உதவும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஒசாகாவில், கடந்த 2024 நிதியாண்டில் சுமார் 90 நீர் குழாய் கசிவுகள் இனங்காணப்பட்டன. இருப்பினும் வரவு செலவு திட்டத்தில் ஏற்பட்ட பற்றாக்குறையால் சுத்திகரிப்பு பணிகள் நிறுத்தப்பட்டிருந்ததாக தெரிவிக்கப்படுகிறது.
இதேவேளை 20% க்கும் மேற்பட்ட குழாய்கள் 40 ஆண்டுகாலமாக பயன்பாட்டில் இருப்பதாகவும், அவை பழுதடைந்து வருவதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.





