அரையிறுதி வாய்ப்பை நிர்ணயிக்கும் மிக முக்கிய போட்டி இன்று!
T-20 உலகக்கிண்ண தொடரின் சூப்பர் 8 சுற்றில் இந்தியா India மற்றும் சிம்பாப்வே Zimbabwe அணிகள் இன்று (26) மோதுகின்றன.
சென்னை Chennai சேப்பாக்கம் மைதானத்தில் இரவு 7 மணிக்கு போட்டி ஆரம்பமாகும்.
லீக் சுற்றில் 3 போட்டியிலும் வென்ற இந்தியா சூப்பர் 8 சுற்றில் முதல் போட்டியில் தென்னாபிரிக்காவிடம் 76 ஓட்டங்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது.
அரையிறுதி வாய்ப்பில் நீடிக்க வேண்டுமெனில் இன்றைய ஆட்டத்தில் இந்திய அணி அபார வெற்றியை பெற வேண்டும்.
சிம்பாப்வே லீக் சுற்றில் பி பிரிவில் வலுவான ஆஸ்திரேலியா, இலங்கையை வீழ்த்தி முதலிடம் பிடித்து கம்பீரமாக சூப்பர் 8 சுற்றுக்குள் நுழைந்தது.
சூப்பர் 8 சுற்றின் முதல் போட்டியில் மேற்கிந்திய தீவுகள் அணியிடம் 107 ஓட்டங்கள் வித்தியாசத்தில் படுதோல்வி அடைந்ததால் இன்று கட்டாயம் வெற்றி பெற வேண்டிய நிலையில் உள்ளது.





